‛மயோன் 2' உருவாகிறது | யானை படம் : பிரியா பவானி சங்கர் நம்பிக்கை | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கிர்த்தி ஷெட்டி | திருமணம் குறித்து எந்த ஐடியாவும் இல்லை : ஸ்ருதிஹாசன் | மதுரைக்கார இளைஞனாக மாறும் ஆர்யா | கமலுக்கு கோல்டன் விசா | பிரித்விராஜ் ஒரு கேரள கமல் : விவேக் ஓபராய் புகழாரம் | பாலியல் புகார் நடிகரின் ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தை நாடும் கேரள அரசு | இயக்குனர் சங்கத்திற்காக ஒன்றிணையும் ஜீத்து ஜோசப் - பிரித்விராஜ் | மோகன்லாலுக்கு வில்லனாக மாறும் ஹரீஷ் பெராடி |
கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சினிமா இயக்குனர்கள் பலருக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உத்வேகம் இருக்கிறது. பலர் நான்கைந்து கதைகளை எழுதி முடித்துவிட்டதாகச் சொல்லி வருகிறார்கள்.
நடிக, நடிகையர் சிலர் யு-டியுப் சேனல் ஆரம்பித்து ஏதாவது வம்பிழுத்துக் கொண்டு பிஸியாகிவிட்டார்கள். சிலர் புதிது புதிதாக என்ன வீடியோ போடலாம் என யோசித்து செயல்படுகிறார்கள்.
2019ம் ஆண்டு பரத் நடித்து வெளிவந்த சிம்பா என்ற படத்தை இயக்கிய அரவிந்த் ஸ்ரீதர், ஒரு வித்தியாசமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கமல்ஹாசன் நடித்து 1988ம் ஆண்டு வெளிவந்த சத்யா படத்தின் போட்டா படியுது படியுது என்ற பாடலை மட்டும் மறு உருவாக்கம் செய்துள்ளார்.
அந்தப் பாடலை 'மாஸ்டர்' இயக்குனர் லோகேஷ் டுவிட்டரில் வெளியிட்டு கமல்ஹாசனையும் 'டேக்' செய்திருந்தார். மேலும் கமல் திரையுலகில் 61 ஆண்டுகளை நாளை(ஆக., 12) நிறைவு செய்கிறார். இதற்கு கமல்ஹாசன் டுவிட்டரில் ஒரு நெகிழ்ச்சி பதில் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
“இது வெறும் மலரும் நினைவுகள் அல்ல, மாறா அன்பு. இதற்கு பதில் பரிசு என் மாறா அன்பு மட்டுமாகவே இருக்க முடியும். என் நீண்ட பயணத்தில் என்னை அயர்வின்றி நடத்தும் சக்தியும் அதுதான்,” என்று கமல் குறிப்பிட்டுள்ளார்.
இனி, இப்படி பழைய பாடல்களை மறு உருவாக்கம் செய்வது பேஷன் ஆகிவிடலாம்.