விதவிதமான புடவைகளில் அழகாக போஸ் கொடுத்த கண்மணி மனோகரன்! | ஆல்யாவை போல போஸ் கொடுத்த அய்லா | உங்களில் யார் அடுத்த ஸ்டார் : ஜீ தமிழ் நடத்தும் மெகா ஆடிசன் | நவாசுதீன் சித்திக்கிற்கு பிரென்சு ரிவேரியா விருது | கங்குலி வாழ்க்கையை இயக்குவது ஐஸ்வர்யா ரஜினிகாந்தா? | பிக்பாஸ் 6ல் இமானின் மாஜி மனைவி பங்கேற்கிறாரா? | கமல் பேசிய ஆபாச வசனத்தை போஸ்டராக ஒட்டிய ரசிகர்கள் மீது வழக்கு பதிவு | பாலியல் தொழிலாளியாக நடித்த அனுபவம் : வினித்ரா மேனன் | 'விக்ரம் 3'க்கும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குநர்: கமல் | பியூட்டி கம்மிங் ஒத்து : ரம்யா கவுடாக்கு ஆர்மி ரெடி |
காமெடி நடிகரும், எம்.எல்.ஏ.,மான கருணாஸ், கொரோனா தொற்று காரணமாக சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கிருந்தபடி அவர் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கருணாஸ் ஆகிய நான் கொரோனா எனும் கொடும் தொற்று காரணமாக அரசு மருத்துவமனையில் இருக்கிறேன். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக உடல் முன்னேற்றம் பெற்று நலமோடு இருக்கிறேன். உயிர்காக்கும் மருத்துவர்களின் அன்பான அரவணைப்பில் தெம்பாக இருக்கிறேன்.
மக்கள் பிரதிநிதி ஆகிய நான் மக்களுக்கான அரசு மருத்துவமனையில் இருக்கிறேன். உயர்ந்த மருத்துவர்கள், சிறந்த மருத்துவம், கனிவான பணிவிடை, ஆறுதல் தரும் வார்த்தை, ஆரோக்கியமான உணவு, துப்புரவு பணியாளர்களின் தூய்மையான பணி, சுத்தமான காற்று, மன அமைதி தரும் அழகான இடம், நான் இருக்கும் அரசு மருத்துவமனை.
மக்களோடு மக்களாக தொகுதி மேம்பாட்டு பணிகளில் பங்கேற்ற எனக்கு கண்ணுக்குத் தெரியாத கொரோனா என்னை தொற்றிக் கொண்டது. இப்போது நான் தேறி வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.