Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வரம்பு மீறும் மீரா மிதுன் இத்தோடு நிறுத்த வேண்டும் : பாரதிராஜா கண்டிப்பு

10 ஆக, 2020 - 17:13 IST
எழுத்தின் அளவு:
Bharathiraja-condemen-to-Meer-Mithun-for-abusing-celebrities

தமிழ் சினிமாவில் நிலவும் நெபோடிசம் குறித்து கோலிவுட் மாபியா என்ற பெயரில் நடிகை மீரா மிதுன் சமூகவலைதளங்களில் திரைப்பிரபலங்களை விமர்சித்து வந்தார். இதற்கு அந்த ரசிகர்கள் பதிலடி கொடுத்து வந்தனர். ஒருக்கட்டத்தில் எல்லை மீறிய மீரா மிதுன், நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா குறித்தும் அவர்களது மனைவி, குடும்பத்தினர் குறித்தும் தரக்குறைவாக பேசினார். இது திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் திரையுலகில் உள்ள எவரும் இதுப்பற்றி வாய்திறக்கவில்லை. ஏன் சம்பந்தப்பட்ட நடிகர்கள் கூட அமைதி காத்து வந்தனர். அதேசமயம் நடிகர்களின் ரசிகர்கள் இன்னும் ஆவசேமாகி, மீராவை சமூகவலைதளங்களில் சகட்டுமேனிக்கு தீட்டி தீர்த்தனர். இதனால் சமூகவலைதளமே கிட்டத்தட்ட சாக்கடை போன்று மாறியது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சங்கமோ இல்ல பிற சங்கங்கங்களோ எந்த ஒரு அறிக்கையோ, கண்டனம் தெரிவிக்காத நிலையில் புதிதாக உருவாகி உள்ள தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும், இயக்குனருமான பாரதிராஜா ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ஆபத்தான கலாச்சாரம்

அதில் அவர் கூறியிருப்பதாவது : சமீபமாக கேட்கும் அல்லது பார்க்கும் பல சம்பவங்கள் அதிர்ச்சியைத் தருகிறது. புகழ் போதையில் ஒருவரையொருவர் இகழ்வதும், இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அவதூறு பேசுவதும் அதை சமூக ஊடகங்கள் வெளிக்கொணர்வதும் கண்ணாடி வீட்டிற்குள்ளிருந்து கல்லெறிந்து கொள்வதைப் போலவும், மல்லாக்க படுத்துக் கொண்டு எச்சிலை உமிழ்வதைப் போலவும் தமிழ் சினிமா வெளியில் அரங்கேறுவது ஆபத்தான கலாச்சாரம் தொடங்கியுள்ளதோ என ஐயம் கொள்கிறேன்.

ஒருவரையொருவர் மதித்து வேலை செய்த காலகட்டத்தை... ஒருவரையொருவர் மரியாதை செய்து கலைப்பணியாற்றிய காலகட்டத்தை நாம் கடந்துவிட்டோமா என்ன? என்ற கவலையும் சேர்ந்து கொள்கிறது. இதோ, நம் அன்புத் தம்பி விஜய், சூர்யா போன்றோர் எத்தகைய அடித்தளங்களை அமைத்து இந்த உயரத்திற்கு வந்துள்ளனர்.. கவர்ச்சிகரமான இந்தத் துறையில் தன் பெயர் கெட்டுவிடாத அளவுக்கு எப்படி தங்கள் வாழ்க்கை முறையை வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்? திருமணம் செய்து கண்ணியமான குடும்ப வாழ்க்கையை, அழகுற கட்டமைத்துள்ளனர் என்பதை இத்தனை ஆண்டுகால அவர்களின் வாழ்க்கை நம் முன் கண்ணாடி போல் நிற்கிறதே.. !!

வரம்பு மீறும் மீராவை கண்டிக்கிறேன்

அழகிய ஓவியத்தின் மீது சேறடிப்பது போல மீரா மிதுன் என்கிற பெண் தன் வார்த்தைகளை கடிவாளம் போடாமல் வரம்பு மீறி சிதறியுள்ளார். திரையுலகில் பயணிக்கும் ஒரு மூத்த உறுப்பினனாக நான் இதைக் கண்டிக்க கடமைப்பட்டுள்ளேன். சிறு பெண், பக்குவமில்லாமல் புகழ் வெளிச்சம் தேடிப் பேசுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். கவுரமாக வாழும் கலைஞர்களின் குடும்பத்தைப் பற்றி அவதூறு பேசுவதை சினிமா கலைஞர்கள், துறை சார்ந்தவர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள். இதுவரை பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சூர்யா எத்தனையோ பிள்ளைகளுக்கு கல்வி கொடுக்கும் பணி செய்கிறார். சத்தமில்லாமல் விஜய்யும் நிறைய மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அப்படிப்பட்டவர்களை, அவர்களின் குடும்பங்களை இகழ்வது ஏற்கத்தக்கதல்ல. மீரா, வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது. உழைத்துப் போராடி... எண்ணங்களை சீர்செய்து நல்ல பெயர் வாங்க முயற்சி செய்யுங்களம்மா. வாழ எத்தனையோ வழிகள் இருக்கிறது. அடுத்தவரைத் தூற்றிப், பழித்து அதில் கோட்டை கட்டாதீர்களம்மா. அது மண்கோட்டையாகத்தான் இருக்கும். வார்த்தைகள் பிறருக்கு வலியைத் தருவதாக அமையாமல், இன்னொருவருக்கு வாழ்க்கையை வளம் ஏற்படுத்தும்... பசியைப் போக்கும்... அவசியமானவைகளாக அவை உதடுதாண்டி வெளிவரட்டும்.

திரையுலகினர் ஏன் கண்டிக்கவில்லை

நம் சகக் கலைஞர்களின் குடும்பத்தை அவதூறாகப் பேசியும்... நடிகர் சங்கம் மட்டுமல்ல.. வேறெந்த சங்கமும் எந்தவிதமான எதிர்க்குரலும் எழுப்பாதது வியப்பை அளிக்கிறது. இன்றுவரை சங்கத்தின் தலையீட்டை எதிர்பார்த்திருந்தேன். ஆனால், அசைவில்லை. தேர்தல் நடைபெறாத சங்கம் என்றால், சொந்தத் தேவைகளுக்காகக் கூட கண்டனக்குரல் தராத அளவிற்கு குரல்வளை நெறிபட்டா கிடக்கிறது? யாரோ ஒருவனின் அவமானம் தானே? நாம் ஏன் பேச வேண்டும் என்ற எண்ணம் எழுந்தால் நம் வீடு அசிங்கத்தால் அமிழ்ந்துபோகும்... அந்த சேறு நாளை உன் மீதும் வீசப்படும் இல்லையா? எல்லோரும் கூடிக் கண்டித்திருக்க வேண்டாமா??

நறுக்கப்பட வேண்டிய சமூக ஊடகங்கள்

சமூக ஊடகங்களும் இப்படிப்பட்ட அவதூறுகளைக் கண்ணியத்திற்குட்பட்டு ஒளிபரப்புவதை நிறுத்தக் கேட்டுக் கொள்கிறேன். முன்பெல்லாம் பத்திரிகை தர்மம் என்ற ஒன்றும்... ஊடகங்களும் கலைஞர்களும் ஒரு குடும்பம் என்ற கட்டுக்கோப்பில் இருந்தோம். ஆனால் இன்று அவை காற்றிலெறியப்பட்டு, கட்டற்று போய்க்கொண்டிருப்பதாகத் தோணுகிறது. மற்றவர்களை அவர்களின் வாழ்க்கை அமைப்பைக் கேலிசெய்யும் வார்த்தைகளை ... எழுத்தைக் கூட தேடிப்பிடித்து கத்தரி போடுங்கள் நண்பர்களே.. இப்படிப்பட்டவர்களின் ஊக்குவிப்பு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். அதனால் சமூக ஊடகங்கள் நறுக்க வேண்டியதை நறுக்க வேண்டியவர்களை... தயவுசெய்து கவனித்து நறுக்கிவிடுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

ரசிகர்களை கட்டுப்படுத்துங்க உச்ச நட்சத்திரங்களே
உயரத்திலிருக்கும் நட்சத்திரங்களின் ரசிகர்களின் பின்னூட்ட வார்த்தைகளும் மிகக் கேவலமாகவும் ஆபாசமாகவும் இருப்பதைக் கவனித்தே வருகிறேன். நடிகை கஸ்தூரி போன்றோர் அதற்கு இலக்காகி உள்ளனர். ரசிகர்கள்தானே கெட்ட வார்த்தை பேசுகிறார்கள்... ??!நமக்கென்ன என நட்சத்திரங்களும் அமைதியாக வேடிக்கைப் பார்க்கக்கூடாது. அவர்களை நல்வழிப்படுத்த, ஆரோக்கியமான தலைமுறைகளை உருவாக்க முயற்சியெடுக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவரின் கடமையும் கூட...

சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் படிக்கக் கூசும் கேவலமானவைகளாக உள்ளன. ஒரு அறிக்கைவிட்டாவது அவர்களை மட்டுப்படுத்த வேண்டியது அவசியம். அந்த ரசிகன் எங்கிருந்தோ கழிவின் மீது கல்லடிக்கிறான். பாருங்கள், அது நம் வீட்டு அடுப்படியில் நாறுகிறது. உங்கள் பெயரும் புகழும் நீடித்து நிலைத்திருக்க இன்றே நல்ல கண்மணிகளை வளர்த்தெடுங்கள் உச்ச நட்சத்திரங்களே... என் போன்றோருக்கு உங்கள் மீது தூசு விழுந்தாலும் உத்திரம் விழுந்தது போல் வலிக்கிறது. ஒருவருக்கொருவர் மரியாதை செய்து இணக்கமாக உயரும் சூழ்நிலைகளை விரைவில் உருவாக்குவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி!

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (46) கருத்தைப் பதிவு செய்ய
பதுங்கிப் பாய்ந்த வனிதா: ரூ.2.5 கோடி கேட்டு லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு நோட்டீஸ்பதுங்கிப் பாய்ந்த வனிதா: ரூ.2.5 கோடி ... ராணாவுக்கு கிண்டலாக வாழ்த்து கூறிய விஷ்ணு விஷால் ராணாவுக்கு கிண்டலாக வாழ்த்து கூறிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (46)

Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
12 ஆக, 2020 - 01:51 Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) ஏதோ பாரதிராஜா மட்டும் வரம்பு மீறியதில்லை போல பேசுகிறார்.. வரம்பு மீறிய பாரதிராஜா மீது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.
Rate this:
LAX - Trichy,இந்தியா
12 ஆக, 2020 - 01:19 Report Abuse
LAX சின்மயி, விஜயலக்ஷ்மி விஷயங்களில் அமைதியாக, இருக்கற இடம் தெரியாம இருந்துட்டு, இப்ப சோதிகாவுக்கும், சோசப் விசய் வூட்டுக்காரம்மாவுக்குமாக, ஓவரா.. பொங்கி, மீரா மிதுன் னை இளித்தவாயாக நினைத்துக்கொண்டு, லெங்க்த்தா அறிக்கை விடும் புதிய சங்கத் தலைவருக்கு, வாசகர்கள் கருத்து பகுதியில் இதுவரை குவிந்திருக்கும் கண்டனங்கள்.. அதைவிட, லெங்க்த்.. இப்போ.. 'என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்' னு யார் இவருக்காக வக்காலத்து வாங்கப் போறாங்க னு பாப்போம்..
Rate this:
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
17 ஆக, 2020 - 09:47Report Abuse
RaajaRaja Cholanஇந்த ராசா இருக்கரே பாரதி ராசா , அவர் ஒரு காரிய வாதி , காரிய கிறுக்கன் என்பார்கள் அந்த வகை அதி மேதாவி. அதிமுக அமைச்சர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவரில்லை...
Rate this:
siriyaar - avinashi,இந்தியா
11 ஆக, 2020 - 11:49 Report Abuse
siriyaar இவர் அறிமுகபடுத்திய ஹிரோயின்களில் ஒன்றை கூட சும்மா விட்டுறுக்க மாட்டார்,
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
11 ஆக, 2020 - 11:24 Report Abuse
Ramesh R மீரா மிதுனின் அடுத்த அட்டாக் அன்னன் தான்
Rate this:
vbs manian - hyderabad,இந்தியா
11 ஆக, 2020 - 11:14 Report Abuse
vbs manian சினிமா குடுமத்தை பற்றி குறை சொன்னால் வேதனை அறிக்கை விடுகிறார். தமிழ் சமுதாயத்தில் நடக்கும் மற்ற அவலங்களை பற்றி மௌனம். இந்து மத கலாச்சாரம் தெய்வங்கள் நம்பிக்கைகள் .ஒரு குறிப்பிட்ட இனத்தை பற்றி வசை பாடுதல் இவையெல்லாம் கண்ணில் படவில்லையோ நிஜ சமுதாய அக்கறை இருந்தால் அநியாயங்கள் எல்லாவற்றையும் கண்டிக்க வேண்டும்.
Rate this:
மேலும் 40 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in