ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவாகும் 1947 | கன்னடத்தில் திரிஷ்யம் 2 : பி வாசு இயக்குகிறார் | அகோரியாக அதிரவைக்கும் பாலகிருஷ்ணா | ரிலீஸ் தேதியுடன் ஜூனியர் என்டிஆரின் புதுப்பட அறிவிப்பு | ராதே ஷ்யாம் புதிய போஸ்டர் வெளியீடு | கர்ணன் - தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி | கொரோனாவிலிந்து மீண்டுவிட்டோம் - மாதவன் | சாந்தி வாழ்க்கை படம் துவங்கியது | தனுஷிற்கு ஜோடியாகும் உப்பெனா நாயகி | கபடி பயிற்சியில் துருவ் விக்ரம் |
வித்யாபாலன் நடித்துள்ள சகுந்தலாதேவி படம் ஆன்லைனில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது எல்லா நடிகைகளும் தங்கள் வாழ்க்கை அனுபவங்கள் பற்றி மனம் திறந்து பேசி வருகிறார்கள். அந்த வரிசையில் வித்யா பாலனும் தனது சினிமா கேரியர் பற்றி பேசி இருக்கிறார். இதில் மலையாளம் மற்றும் தமிழ் சினிமா தன்னை புறக்கணித்தது குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது: நான் மலையாளத்தில் முதன் முதலாக மோகன்லால் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆனேன். அந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் 8 பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் மோகன்லால் படம் முதல் கட்ட படப்பிடிப்புடன் கைவிடப்பட்டது. அதன் பிறகு என்னை தேடி வந்த படங்களில் இருந்து நான் நீக்கப்பட்டேன். என்னை ராசியில்லாதவள் என்று முத்திரை குத்தினார்கள். நான் குண்டாக இருப்பதாக சொன்னார்கள்.
தொடர்ச்சியாக படங்களில் இருந்து நீக்கப்பட்டதால் மனமுடைந்து போனேன். ஒரு பெரிய தமிழ் படத்தில் ஒப்பந்தம் செய்தார்கள். மலையாளம் கைவிட்டாலும் தமிழ் கைவிடாது என்று நம்பினேன். அந்தப் படத்தில் இருந்தும் என்னை நீக்கிவிட்டார்கள். என்ன நடக்கிறது என்றே புரியாமல் இருந்தேன்.
படங்களில் இருந்து நீக்கப்பட்டபோது எனது கோபத்தை அம்மாவிடம் தான் காட்டினேன். பிரார்த்தனை செய், தியானம் செய் என்பார் அம்மா. எங்கள் பகுதியில் இருக்கும் சாய் பாபா கோவிலுக்கு அடிக்கடி சென்று பிரார்த்தனை செய்தேன். நான் பல இரவுகள் அழுதபடியே தூங்கியிருக்கிறேன். நான் அழுது அழுது தலையணை ஈரமான நாட்களும் உண்டு என்கிறார் வித்யா பாலன்.