Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிலரால் சாக்கடை ஆகும் சமூக வலைத்தளங்கள்

08 ஆக, 2020 - 16:17 IST
எழுத்தின் அளவு:
Social-medial-becomes-dirty-becuase-few-people

சமூக வலைத்தளங்கள் மூலம் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இந்த உலகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், ஒரு சிலரும், தமிழ் சினிமா ஹீரோக்களின் ரசிகர்கள் சிலரும், சமூக வலைத்தளங்களை சாக்கடை ஆக்கி வருகிறார்கள்.

அஜித், விஜய் ரசிகர்களுக்கு இடையில் தான் இம்மாதிரியான சமூக வலைத்தள சண்டை அதிகமாக நடக்கும். ஆனால், கடந்த சில வாரங்களாக பிரபலங்களுக்குள் சண்டை நடந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

வனிதா விஜய்குமாரின் மூன்றாவது திருமணத்தை மையமாக வைத்து சமூகவலைதளங்களில் கேவலமான சண்டைகள் நடந்தன. ஆரம்பத்தில் ரசிகர்களிடம் தொடங்கிய சண்டை பின்பு லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி போன்ற திரைப்பிரபலங்களும் உள்ளே வந்தது இன்னும் களேபரம் ஆனது. வனிதா சில தரமற்ற வார்த்தைகளை உபயோகிக்க பதிலுக்கு இவர்களும் பேசியது குழாயடி சண்டையை விட மோசமாக சென்றது.

இந்த பிரச்னை ஓய்ந்த நிலையில் அதற்கடுத்து, கடந்த சில நாட்களாக நடிகை மீரா மிதுன், நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோரையும் அவர்களது மனைவி மற்றும் குடும்பத்தினரையும் தரக்குறைவாக விமர்சித்து வருகிறார். அதற்கு அவர்களின் ரசிகர்கள் கடும் எதிர்ப்புகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.

இருப்பினும் மீரா மிதுன் விடாமல் தொடர்ந்து வீடியோ பதிவுகளைப் பதிவிட்டு வருகிறார். அவரது கமெண்ட் பக்கத்தில் ரசிகர்கள் மிகவும் கேலமான, தரக்குறைவான கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி கமெண்ட் செய்து வருகிறார்கள். இதன்மூலம் சமூக வலைத்தளங்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சாக்கடையாக மாறி சமூகத்தைக் கெடுக்கும் வேலையையும் ஆரம்பித்துவிட்டதாக பலர் நினைக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
ஆர்ஆர்ஆர் - இயக்குனரைத் தொடர்ந்து தயாரிப்பாளருக்கு கொரானோஆர்ஆர்ஆர் - இயக்குனரைத் தொடர்ந்து ... சம்பளத்தில் ரஜினிகாந்த்தை மிஞ்சும் பிரபாஸ் ? சம்பளத்தில் ரஜினிகாந்த்தை மிஞ்சும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
10 ஆக, 2020 - 04:20 Report Abuse
J.V. Iyer கரோனாவினால் வீட்டில் அடைபட்டு இருக்கும்போது முக்கால்வாசி நேரம் தனிமையில் போதையில் இருக்கிறார்கள். அவர்கள் கையில் கைபேசி. கேட்கவேண்டுமா? தூள் கிளப்புகிறார்கள்.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
09 ஆக, 2020 - 05:25 Report Abuse
meenakshisundaram சினிமாக்காரர்கள் ஆதிக்கம் செலுத்தும்போதே ஒரு விஷயம் முக்கியத்துவம் பெறுகிறது ஏனெறால் தமிழகம் அவ்வளவு கீழான நிலையில் உள்ளது -மீண்டும் ஒதுக்கீடு காரணமாகிறது ,திறமை பின்னோக்கி தள்ளப்பட்டு தமிழன் சிந்திக்கும் திறன் இழந்து ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது -அவனுக்கு வேண்டியது ஒதுக்கீடு .மற்றும் டாஸ்மாக் மட்டுமே .அதனாலேயே அவன் பொது வாழ்வில் வித்தயாசமாக் உள்ளான் -அரசியலில் ஈடுபட்டுள்ள தமிழக அரசியல் வாதிகளுள் அவர்களின் தனிப்பட்ட வாழவை தாழ்த்திய பெருமை கருணாநிதிக்கே உண்டு ,தனிப்பட்ட வாழ்வில் ஒழுக்கம் இல்லாதவன் எப்படி பொது வாழ்வில் ஒழுங்காக இருப்பான் ?இதை மறக்கடிக்கவே கூட்டத்தை அடக்கவே டாஸ்மாக் ,மற்றும் ஒதுக்கீடு .
Rate this:
sankaseshan - mumbai,இந்தியா
08 ஆக, 2020 - 17:42 Report Abuse
sankaseshan சமூக வலைதளங்கள் கேட்டதற்கு காரணம் அதை பயன் படுத்துவோர்தான். சிலருடைய கருத்த்துக்களை பார்க்கும்போது இப்படியும் மோசமாக தமிழில் எழுத முடியுமா என்று தோன்றுகிறது .
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
08 ஆக, 2020 - 17:08 Report Abuse
Mirthika Sathiamoorthi வலைத்தளங்களை பயன்படுத்துவர்கள் பிரபலங்களுக்கும் சாமானியனுக்கும் உள்ள வித்தியாசம் உணரவேண்டும்..யார் பிரபலம்? பேசும் பொருளாய் இருபவனல்ல பிரபலம்..யாருக்கு விற்பனை வலிமை இருக்கோ அவன் பிரபலம்.. இறந்த சைக்கோ கொலையாளி தசவந் கூடத்தான் கொஞ்சநாள் மக்கள் மத்தியில் பேசும்பொருளாய் இருந்தான்..அதனால் அவன் பிரபலம்? அந்த நேரத்தில் ஒரு பரபரப்பு அவ்வளவே...மக்கள் நலனுக்கு நடுரோட்டில் போராடியும் மக்களை திரும்பி பார்க்க வைக்கலாம்..நடுரோட்டில் சட்டையை கிழித்துக்கொண்டும் மக்களை திரும்பி பார்க்க வைக்கலாம்...ஆகவே யாராய் நாம் பார்க்கவேண்டும் யாருக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதை வலைத்தளங்களை பயன்படுத்துபவர் பிரபலங்கள் எனும் நபர்களை பின்பற்றுபவர் புரிந்து கொள்ளவேண்டும்...ஆக்கபூர்வமான கருத்துக்கும், அறிவுபூர்வமான சிந்தனைக்கும், மக்களின் வாழ்வாதரங்களின் மீதான அக்கறைக்கு உடைய கருத்துக்களை அதை கூறுபவருடன் விவாதியுங்கள் சண்டையிடுங்கள்...கருத்து மோதல் பல புதிய சிந்தனைகளை உருவாகும்..அதைவிடுத்து தங்கலின் சுய லாபத்துக்கு வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களை ஒதுக்கி விடுங்கள்.. மீராவின் இந்த குற்றசாட்டு முழுக்க முழுக்க அவரின் தனிப்பட்ட லாபத்தின் நோக்கமே..இதில் சமூகத்துக்கு என்ன பயன்? ஜோதிகாவின் இருண்ட வாழ்க்கையை பற்றிய கவலை அவரின் கணவர் அவரின் புகுந்தவீட்டு கவலை..அவர்களே இதை கண்டுக்காதபோது நெப்ட்டிசம் நடுவிலும் மீரா அவங்க ஜோதிகாவின் முகத்திரை கிழித்து சிவகுமார் குடும்பத்துக்கு நியாயம் வாங்கி கொடுக்க போராடுறாங்களா? சிரிப்பா இல்ல? இந்த கருத்தை கண்டுக்காம போகணுமா? முக்கி முக்கி மீராவுக்கு பதில் கருது எழுதணுமா? நிராகரிக்க படும்போது கருத்துக்கள் வலு இழந்துவிடும்..இதை வளைத்திரயை பின்பற்றுபவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்..வக்கர எண்ணத்தை தீர்க்கும் பொது கழிவறை சுவரல்ல வலைத்தளங்கள்..அந்த சுவற்றில் எழுதியது யாரென தெரியாது... இங்கே தெரிந்துவிடும் கவனம்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in