Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'அருவா' வேண்டாம் என்றாரா சூர்யா ?

08 ஆக, 2020 - 11:35 IST
எழுத்தின் அளவு:
Did-Suriya-says-no-to-Aruva

ஹரி இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடிக்க 'அருவா' என்ற படம் உருவாக உள்ளதாக மார்ச் மாதம் 1ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் இந்தப் படம் சூர்யாவின் 39வது படம் எனவும், சூர்யா, ஹரி இணையும் ஆறாவது படம் எனவும் அறிவித்தார்கள்.

ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கி இந்த வருடம் தீபாவளிக்கு படத்தை வெளியிடுவதுதான் அவர்களது திட்டம். ஆனால், படத்தின் தலைப்பில் ஆரம்பமான சர்ச்சை தொடர்ந்து படத்தைப் பற்றி நெகட்டிவான செய்திகள்தான் அதிகம் வந்து கொண்டிருந்தன.

அப்படத்தின் படப்பிடிப்புகள் கொரோனா தொற்று காரணமாக ஆரம்பமாகவில்லை. அதே சமயம் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' என்ற படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாகவும் மற்றுமொரு அறிவிப்பு வெளியானது. இதனிடையே, ஹரி அவருடைய மைத்துனர் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்க உள்ள ஒரு படத்தை இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியானது.

இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை, 'அருவா' படம் இனி நடக்க வாய்ப்பில்லை என்ற ஒரு தகவல் வெளியாகி உள்ளது. 'வாடிவாசல்' படத்திற்கு முன்னதாக பாண்டிராஜ் இயக்க உள்ள படத்தில் சூர்யா நடிக்கப் போகிறார் என்கிறார்கள். சூர்யாவே 'அருவா' படத்தில் நடிக்க விருப்பம் காட்டவில்லை என்றும் ஒரு தகவல். 'அருவா' முற்றிலும் டிராப்பா, அல்லது 'வாடிவாசல்' படத்திற்குப் பிறகு நடைபெறுமா என்பது தயாரிப்பு நிறுவனம் அறிவித்தால் தான் தெரிய வரும்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
திருமணத்திற்கு ராணா 'ரெடி'திருமணத்திற்கு ராணா 'ரெடி' உடனே பரிசோதனை செய்யுங்கள் : கென் கருணாஸ் கோரிக்கை உடனே பரிசோதனை செய்யுங்கள் : கென் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
09 ஆக, 2020 - 17:29 Report Abuse
பெரிய ராசு மகனே நீ எதனை கொண்டாலும் சிவ நிந்தனை உன்னை விடாதடா
Rate this:
sudalai -  ( Posted via: Dinamalar Android App )
08 ஆக, 2020 - 15:36 Report Abuse
sudalai ivalavu buildup theva illa!
Rate this:
Girija - Chennai,இந்தியா
08 ஆக, 2020 - 12:23 Report Abuse
Girija இவர் ஒண்ணா கலர் கட் பனியன் போட்டுக்கிட்டு, போலீஸ் கிராப் வெட்டிக்கிட்டு, கிராம உறவு முறை வசனம் பேசி, பின்னணி இசை அதிர தனி ஆளாக பஸ்ஸையே தூக்கி வீசுவார், இல்லாவிட்டால் போலீஸ் அலுவலகத்திற்குள்ளேயே நூறு கிலோமீட்டர் வேகத்தில் ஜீப்பில் வந்து, கச்சாமுச்சா அதிரடி பின்னணி இசையில் பிரேக் போட்டு , இறங்கி நடக்க கோரஸ் பாட்டு நடிகைகள் போல போலீஸ்கர்ரார்கள் இவர் பின்னால் ஓடி ஓடி (கவனிக்கவும்) வருவார், இவர் அதே நேரத்தில் அதை பண்ணு இதை பண்ணு என்று உத்தரவுகளை பறக்கவிடுவார். வயர்லெஸ் வாக்கிடாக்கி சத்தம் என்று மீண்டும் பின்னணி இசை துணைக்கு வரும். எத்தனை படம் இது போல ? இதுல ஒன்னு ரெண்டு மூணு வேற. இவர் இன்னொரு அறிவா நெப்போலியன் அவ்வளவுதான்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in