Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தண்ணீரில் குதிக்க பயந்த நந்திதா

07 ஆக, 2020 - 20:06 IST
எழுத்தின் அளவு:
Nandita-fear-to-jump-in-water

'அட்டகத்தி' நந்திதா நடித்து வரும் 'ஐபிசி 376' படத்தில் அவர் போலீஸ் உடையில் நிற்கும் போஸ்டர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தின.. உண்மைதான்... ராம்குமார் சுப்பராமா என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் நந்திதா.. ஆனால் நடிப்பது போலீஸ் கேரக்டரில் என்றாலும் தண்ணீரில் குதிப்பதற்கு பயந்துகொண்டு, படப்பிடிப்புக்கே வராமல் நந்திதா இரண்டு வாரம் லீவு எடுத்த காமெடியும் நடந்துள்ளது.

சென்னையில் ஒரு கோவில் அருகில் உள்ள வாய்க்காலில் குதித்து தப்பிச்செல்லும் ரவுடிகளுடன் தண்ணீருக்குள் நந்திதா மோதும் காட்சியை படமாக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததாம்.. ஆனால் எல்லாம் தயாராக இருந்தும், சண்டை பயிற்சியாளர் தைரியம் கொடுத்தும் கூட இரண்டு மணி நேரமாக தண்ணீரிலே நந்திதா கால் வைக்கவே இல்லையாம். காரணம் நந்திதாவுக்கு தண்ணீரில் இறங்குவது என்றாலே பயமாம்.

சமீபத்தில் இந்த தகவலை பகிர்ந்துகொண்ட நந்திதா, “என்னடா இந்தப்பெண் போலீஸ் யூனிபார்ம் போட்டுக்கொண்டு தண்ணீரில் குதிக்க இவ்வளவு யோசிக்குதே என படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த அனைவரும் நினைத்திருப்பார்கள்.. ஆனாலும் பயத்தில் படப்பிடிப்புக்கு இரண்டு வாரம் லீவு போட்டுவிட்டு பெங்களூருக்கு போய்விட்டேன். அங்கே நீச்சல் கற்றுக்கொண்டு பயத்தை போக்கிக்கொண்டு திரும்பிவந்து அந்த சண்டை காட்சியில் நடித்தேன்.. நீச்சல் கற்றுக்கொண்டதை விட அந்த சண்டைக்காட்சியில் நடித்தது இன்னும் சவாலாக இருந்தது” என கூறியுள்ளார்

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மாறி மாறி அன்பைப் பரிமாறிக்கொண்ட விஜய் ஹீரோயின்கள்!மாறி மாறி அன்பைப் பரிமாறிக்கொண்ட ... நெகிழ்ச்சியில் சாந்தனு! நெகிழ்ச்சியில் சாந்தனு!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Escobar -  ( Posted via: Dinamalar Android App )
08 ஆக, 2020 - 20:55 Report Abuse
Escobar natural acting. all the best
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in