Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாறி மாறி அன்பைப் பரிமாறிக்கொண்ட விஜய் ஹீரோயின்கள்!

07 ஆக, 2020 - 20:03 IST
எழுத்தின் அளவு:
Keerthy-suresh---Malavaika-mohanan-shares-their-love

திரையுலகில் எப்போதுமே நடிகர், நடிகைகளுக்குள் போட்டி இருக்கும் என்ற பிம்பம் ரசிகர்களிடையே உள்ளது. முன்னணி நடிகர்கள் நட்பாக இருந்தாலும் கூட, அவர்களது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் மோதிக் கொள்வது வாடிக்கையாகி விட்டது. நடிகர்கள் கூட பரவாயில்லை, நடிகைகள் பட வாய்ப்புக்காக எப்போதுமே ஒருவர் மீது ஒருவர் பொறாமையோடு தான் இருப்பார்கள் என்ற எண்ணம் உள்ளது. ஒரே படத்தில் பல நாயகிகள் நடித்தால் அவர்களுக்குள் யாருக்கு முக்கியத்துவம் என்ற மோதல் இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.

ஆனால் இவர்களில் இருந்து வேறுபட்டு முன்னணி நடிகைகளாக இருந்த போதும், தொழிலைத் தாண்டி தாங்கள் இருவரும் நல்ல தோழிகள் என நிரூபித்துள்ளனர் விஜய் பட நாயகிகள் இருவர்.

விஜய்யுடன் பைரவா மற்றும் சர்க்கார் என இரண்டு படங்களில் ஜோடியாக நடித்தவர் கீர்த்தி சுரேஷ். விரைவில் ரிலீசாக உள்ள மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளவர் மாளவிகா மோகனன். இருவருமே கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பதால் சிறுவயது முதலே தோழிகளாம்.

சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய மாளவிகா மோகனனுக்கு கீர்த்தி சுரேஷ் டுவிட்டர் பக்கம் மூலமாக தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். அதில் கீர்த்திசுரேஷுடன், மாளவிகாவும் உள்ள புகைப்படத்தை அவர் பகிர்ந்திருந்தார். அதற்கு நன்றி தெரிவித்து பதிலளித்த மாளவிகா, “பொதுவாக நடிகைகள் நட்புடன் இருக்க மாட்டார்கள் என்ற உள்ளது. எனவே நமது அன்பை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் புகைப்படம் உள்ளது” என்று கூறியுள்ளார். மாளவிகாவின் இந்தப் பதிவைப் பார்த்து புன்னகைத்துள்ள கீர்த்தி, 'லவ் யூ டூ' என தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

முன்னணியில் உள்ள இரண்டு நடிகைகள் இப்படி அன்பை மாறி மாறி பகிர்ந்து கொண்டதைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர். இது போன்ற ஆரோக்கியமான மனநிலை அனைத்து நடிகர்கள் மத்தியிலும் வர வேண்டுமென அவர்கள் கமெண்ட் வெளியிட்டு வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
குதிரைக்காக அழுத எமி ஜாக்சன்!குதிரைக்காக அழுத எமி ஜாக்சன்! தண்ணீரில் குதிக்க பயந்த நந்திதா தண்ணீரில் குதிக்க பயந்த நந்திதா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in