விக்ரம் வேதா ரீமேக்கிலிருந்து ஆமீர்கான் விலகியது ஏன் | விக்ரம் பிரபுவின் பகையே காத்திரு | கொற்றவை முதல் பாகம் நிறைவு | கொரோனா 2வது அலை: சாய் பல்லவி படம் தள்ளிவைப்பு | சென்னையில் ஸ்பானிஷ் திரைப்பட விழா: 4 நாட்கள் நடக்கிறது | இறுதிக்கட்டத்தில் அன்பறிவ் | பகத் பாசில் ரசிகர் மன்றத் தலைவராக விரும்பும் பாலிவுட் நடிகர் | மகேஷ்பாபுவை இயக்கும் லோகேஷ் கனகராஜ் | மாரடைப்பு ஏற்பட்ட விவேக்கிற்கு ஆஞ்சியோ சிகிக்சை | வீரம் டிரஸ்ல இல்ல புரோ - நெட்டிசனுக்கு பதில் கொடுத்த ஜூலி |
மதராசபட்டிணம் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல மாடலான இவர் தொடர்ந்து ரஜினி, விக்ரம், தனுஷ் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் காதல், கர்ப்பம், குழந்தை என பிஸியானதால் நடிப்பதற்கு இடைவெளி கொடுத்திருக்கிறார். விரைவில் மீண்டும் நடிக்க வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மதராசபட்டிணம் பட ஷூட்டிங்கின் போது நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களை நினைவு கூர்ந்துள்ளார் இயக்குநர் விஜய். அதில் எமி ஜாக்சனுக்கு இந்தியாவில் குறிப்பாக தமிழர்களின் வாழ்க்கை முறை வித்தியாசமாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார். சாலையில் மாடு செல்வதைப் பார்த்தே அவர் ஆச்சர்யப்பட்டதாகக் கூறியுள்ள விஜய், படப்பிடிப்பின் போது குதிரை வெயிலில் இருந்ததைப் பார்த்து எமி அழுததாகவும் கூறியுள்ளார்.
பிறகு குதிரையை நிழல் இருக்கும் ஷெட் போன்ற ஒரு இடத்திற்கு கொண்டு சென்று, அதற்கு அதிக உணவு கொடுத்த பிறகு தான் எமி ஜாக்சன் அமைதியானாராம்.