ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' பட புதிய போஸ்டர் வெளியீடு | 200 சவரன் நகை கொள்ளை - புதிய புகார் அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | மணிரத்னத்தின் மீதான வழக்கு தள்ளுபடி | ஸ்கை டைவிங்கில் அசத்திய அஞ்சு குரியன் | பிரதமரை சந்தித்த ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட குழுவினர் | சமந்தா நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்கிறாரா? | மதுபான பிசினஸில் இறங்கிய ஷாரூக்கான் மகன் ஆரியன்கான்! | பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மருதநாயகத்தை தூசி தட்டும் கமல் | எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து சொன்ன அஜித்குமார் | தீண்டாமை பிரச்னையா : தியேட்டர் நிர்வாகம் விளக்கம் ; ஊழியர்கள் மீது வழக்குபதிவு |
ஹிந்தித் திரையுலகின் முன்னணி நாயகிகளில் ஒருவர் வித்யா பாலன். பெரும்பாலும் பொது நிகழ்வுகளுக்கு புடவை மட்டுமே அணிந்து வருவார். மும்பையில் செட்டிலான தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர் வித்யா.
இன்று 'தேசிய கைத்தறி தினம்' நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கைத்தறி நெசவாளர்களைப் பெருமைப்படுத்தும் விதத்தில் இந்த நாள் சிறப்பிக்கப்படுகிறது.
இதையடுத்து பட்டுப்புடவை, கைத்தறிப் புடவை விரும்பியான வித்யா பாலன் அவர்களைப் பெருமைப்படுத்தும் விதத்தில் டுவிட்டரில், “தேசிய கைத்தறி தின நாளில், இந்த நெருக்கடியான சூழ்நிலையில் கைத்தறி ஆடைகளை அணிந்து, அவற்றை வாங்கி நெசவாளர்களுக்கு நமது ஆதரவைத் தெரிவிப்போம். அவர்களது அற்புதமான படைப்புகள் நமது தினசரி வாழ்க்கையில் தொடரும் பட்சத்தில் இந்திய நெசவாளர்களின் திறமை உயிர்ப்புடன் இருக்கும். உழைப்பின் அன்பைக் கொண்டாடுவோம்,” என நெசவாளர்களுக்கான தனது ஆதரவை அழகாகத் தெரிவித்துள்ளார்.