Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அப்பா மூலமே சினிமாவுக்கு வந்தேன் : ஸ்ருதிஹாசன்

06 ஆக, 2020 - 18:11 IST
எழுத்தின் அளவு:
I-came-to-cinema-because-of-my-father-says-Shrutihaasan

கலைத் துறையில் வாரிசு நடிகர், நடிகைகள் தலைமுறைகளாக இருந்து வருகின்றனர். தங்கள் அப்பா அல்லது அம்மாவின் மூலம் திரையுலகில் அறிமுகமாகினாலும், தொடர்ந்து தங்களது சொந்த திறமையினால் மட்டுமே இத்துறையில் நீடித்து நிற்பவர்கள் பலர். அந்தவகையில், தனது அப்பா கமல்ஹாசன் மூலமே, சினிமாவுக்கு வந்ததாக கூறியுள்ளார் ஸ்ருதிஹாசன்.

“நான் எனது அப்பா கமல்ஹாசனின் தயவால் தான் சினிமாவுக்கு வந்தேன். இதில் எவ்வித குற்றமும் நான் கண்டதில்லை. நான் தமிழில் முதன்முதலில் அறிமுகமான படம் ஏழாம் அறிவு, இந்த படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடித்தேன். நடிகர் சூர்யாவும், அவரது அப்பா சிவக்குமாரின் மூலமாகவே திரைத்துறைக்கு வந்தவர். ஆனால், அவர் இங்கு தனது கடின உழைப்பை தந்ததால், அடுத்தடுத்த படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக உள்ளார்.

சினிமாவில் நுழைவதற்கு மட்டுமே நாங்கள் எங்களது பெற்றோரின் தயவை பயன்படுத்தினோம். அதற்கு பிறகு தங்களது சொந்த முயற்சியால் தங்களது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளோம். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் இந்த நடைமுறையே உள்ளது. பாலிவுட் திரையுலகில் இந்த நடைமுறை இல்லை என்று கருதுகிறேன்” என பேட்டியொன்றில் கூறியுள்ளார் ஸ்ருதி.

நடிகையாக மட்டுமின்றி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளார் ஸ்ருதி. சில காலம் நடிப்பிற்கு இடைவெளி கொடுத்திருந்த அவர், தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம், தெலுங்கில் கிராக், பலுபு உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பொன்னியின் செல்வனில் பேபி சாரா!பொன்னியின் செல்வனில் பேபி சாரா! கொரோனா தொற்று : எஸ்.பி.பி., நலமாக உள்ளார் - எம்.ஜி.எம். மருத்துவமனை கொரோனா தொற்று : எஸ்.பி.பி., நலமாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in