Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்யின் தந்தை ஏமாற்றினார் ; சோஷியல் மீடியாவில் பரவும் ரஜினி பட தயாரிப்பாளரின் வீடியோ

06 ஆக, 2020 - 17:49 IST
எழுத்தின் அளவு:
Producer-Kalaiganam-speech-about-vijay-and-SAC-video-viral-now

கடந்த சில நாட்களாக தனைத்தானே சூப்பர் மாடல் என சொல்லிக்கொள்ளும் மீரா மிதுன் என்பவர், நடிகர் விஜய், சூர்யா உள்ளிட்டவர்களை நெபோடிசம் தயாரிப்புகள் அதாவது வாரிசு நடிகர்கள் என விமர்சித்து வருகிறார். இது ஒருபக்கம் சர்ச்சையை கிளப்பியிருக்க, இன்னொருபக்கம் தனது தந்தை எஸ்.ஏ.சி நடிக்க வேண்டாம் என கூறியும் தன்னை சினிமாவில் நடிக்க வைக்க நடிகர் விஜய் பிடிவாதம் பிடித்த நிகழ்வையும் விஜய்யின் வளர்ச்சிக்கு உதவிய தன்னை அவரது தந்தை எப்படி புறக்கணித்தார் என்றும் முன்னாள் தயாரிப்பாளரும் கதாசிரியருமான கலைஞானம் கூறியுள்ள ஒரு வீடியோ திடீரென சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ரஜினியை முதன்முதலாக ஹீரோவாக வைத்து 'பைரவி' படத்தை தயாரித்தவர் தான் இந்த கலைஞானம். அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதன் சாராம்சம் இதுதான்..

விஜய் அறிமுகமான காலகட்டத்தில் அவரது படங்கள் சரியாக போகவில்லை என்பதால் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கலைஞானம் வீட்டிற்கு சென்றாராம்.. “என் மகனை வைத்து இரண்டு படங்களை எடுத்தத்தில் என்னிடம் இருந்த இரண்டு வீடுகளை விற்று விட்டேன்.. இனி நீ நடிக்கவே வேண்டாம் என பெல்ட்டால் அடித்தாலும் கூட விஜய்யும் அவரது அம்மாவும் பிடிவாதம் காட்டுகிறார்கள்..” என்று கூறினாராம். மேலும் கலைஞானத்தை அழைத்து சென்று அப்போது தான் இயக்கியிருந்த விஜய் படம் ஒன்றை போட்டுக்காட்டி நீங்கள் தான் ஏதாவது உதவ வேண்டும் என கோரிக்கையும் வைத்தாராம்.

பைரவி படத்தை இயக்கிய எம்.பாஸ்கருடன் சேர்ந்து விஜய் நடித்த அந்த படத்தை பார்த்தாராம் கலைஞானம்.. அதில் நடித்த விஜய்யை பார்த்ததும் பாஸ்கருக்கு விஜய்யை வைத்து ஒரு படம் தயாரிக்கும் யோசனை தோன்றியதாம்.. அதனால் பாஸ்கரை அழைத்துக்கொண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் வீட்டிற்கு சென்று உங்கள் மகனை வைத்து இவர் படம் தயாரிக்க விரும்புகிறார்.. நீங்களே அந்த படத்தை இயக்குங்கள்.. என்று ஒரு கூட்டணியை உருவாக்கியதுடன் அந்த படத்திற்கு ஒரு நல்ல கதையையும் கொடுத்தாராம் கலைஞானம். அந்தப் படம் தான் விஜய் நடித்த விஷ்ணு..

ஆனால் படம் வெற்றிபெற்ற பின்னர் இந்த படம் உருவாக காரணமாக இருந்த, படத்திற்கு கதை கொடுத்த கலைஞானத்திற்கு உரிய சன்மானத்தை இன்றுவரை எஸ்.ஏ.சந்திரசேகர் வழங்கவே இல்லையாம். அதன்பிறகு விஜய் பட வெற்றிகளால் கிடைத்த பணத்தை வைத்து நிறைய வீடுகளை வாங்கிப்போட்டு கொண்டிருந்த எஸ்.ஏ.சந்திரசேகரிடம், உங்களிடம் இருக்கும் வீடுகளில் ஒன்றை வாடகைக்கு எனக்கு தர முடியுமா..?” என்று கலைஞானம் கேட்டாராம். ஆனால், “இப்போது பவர் எதுவுமே என் கையில் இல்லை சார்.. எல்லாமே விஜய் மற்றும் அவரது மனைவியிடம் தான் இருக்கிறது” என்று பதில் கூறி நழுவினாராம் எஸ்.ஏ.சந்திரசேகர்.

கடந்த வருடம் ஒரு பேட்டியாக வெளியான கலைஞானத்தின் இந்த வீடியோ, இந்த சமயத்தில் சோஷியல் மீடியாவில் மீண்டும் வைரலாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (16) கருத்தைப் பதிவு செய்ய
லைசன்ஸ் ரினீவல் வந்த பிரபாஸ் - சூழ்ந்த ரசிகர்கள்லைசன்ஸ் ரினீவல் வந்த பிரபாஸ் - ... பொன்னியின் செல்வனில் பேபி சாரா! பொன்னியின் செல்வனில் பேபி சாரா!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (16)

Anand - chennai,இந்தியா
14 ஆக, 2020 - 16:03 Report Abuse
Anand சாக்கடைகளை கோபுரத்தின் மேல் கொண்டு செல்ல உதவி புரிந்துவிட்டார் இந்த கலைஞானம், போயும் போயும் இவனுங்களுக்கு உதவியதற்காக கலைஞானம் சாருக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.
Rate this:
Tamil - chennai,இந்தியா
12 ஆக, 2020 - 06:42 Report Abuse
Tamil தமிழ்நாட்டில் தமிழன் மட்டும் அயோக்கியன் மற்றவன் எல்லாம் யோக்கியன். மீரா மிதுன் வச்சு செய்தார்கள் நடக்கவில்லை அடுத்து இவனை போன்ற பணம் வாங்கும் கேவலமான பிறவி இவளோ நாட்கள் கோமாவில் இருந்தாரா ??? இப்பொழுதுதான் கோமாவில் இருந்து முழித்தாரா ???? அரசியலுக்கு வந்தால் பாதிப்பு வரும் என்பதால் அரசியல் பேசும் சூர்யா மற்றும் விஜய் போன்ற நடிகர்களை கேவலப்படுத்த மத்திய மாநில அரசியல் நடக்கிறது. எப்படி பட்ட படிப்பறிவுற்ற கேவலமான பிறவிகளை நாம் ஜாதி மதம் பார்த்து தேர்ந்த் எடுப்பதால் வரும் கேவலமான அரசியல் இது. அதே ஜாதி மாதத்தில் நல்லவர்கள் உள்ளார்கள் அவர்களை மேலே வரவிடுவதில்லை. கேவலப்படுத்தினால் வரமாட்டார்கள் என்பதற்காக இது போன்ற கேவலமான நிகழ்வுககுக்கு பின்னென்னயில் செயல்படுவதாக சொல்லப்படுகிறது. பெண்களை வைத்து கேவலப்படுத்தும் கொஞ்சமும் நாகரிகம் தெரியாத நபர்களை நம் திரும்ப திரும்ப தேர்ந்து எடுக்கிறோம். இது போன்ற முட்டாள்தனம் செயல்களை விட்டு நல்ல வேட்பாளர் சுயேச்ச்சியாக நின்றாலும் என்று நம் தேர்ந்து எடுக்கிறோமோ அன்று தான் இந்த கேவலமான அரசியல் மாறும்.
Rate this:
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
10 ஆக, 2020 - 17:05 Report Abuse
மூல பத்திரம் மாஸ்டர்கள் இப்படித்தான் இருப்பார்கள்.
Rate this:
எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா
10 ஆக, 2020 - 06:44 Report Abuse
எதிர்க்குரல் Rajnikanthin ulkutthu velayaaa irukkumo???
Rate this:
Enrum anbudan - dammam,சவுதி அரேபியா
09 ஆக, 2020 - 12:20 Report Abuse
Enrum anbudan அப்பனும் மகனும் திருட்டு கும்பலை சேர்ந்தவனுகல். மேடையில் மகன் மூஞ்சியை ஒன்றுமே தெரியாதது போல் வைத்துக்கொள்ள மிகுந்த சிரமப்படுவதை பார்க்க பாவமாய் இருக்கும்.
Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in