Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹீரோவுடன் படுக்கையை பகிரவேண்டும் என்பது எழுதப்படாத விதி: ரவீணா டாண்டன்

06 ஆக, 2020 - 17:15 IST
எழுத்தின் அளவு:
Raveena-Tandon-about-casting-couch-in-bollywood

திரையுலகில் வாய்ப்பிற்காக நடிகைகளை பாலியல் ரீதியாக ஒரு சிலர் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக உள்ளது. மீடூ என்ற பெயரில் இது பற்றி பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் பெரிய நடிகைகள் இது பற்றி வாய் திறக்கவில்லை. தங்களுக்கு அது போன்ற அனுபவம் இல்லை என சாமர்த்தியமாக இதில் இருந்து விலகிக் கொண்டனர்.

இந்நிலையில் 90களில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்த ரவீணா டாண்டன் இது பற்றி தற்போது பேசி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தி மட்டுமின்றி தமிழில் கமலுடன் ஆளவந்தான், அர்ஜூனுடன் சாது போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர் ரவீணா.

“90-களில் பாலிவுட்டுக்கு என எழுதப்படாத சில விதிகள் இருந்தன. அவற்றை பின்பற்ற மறுத்ததால் நான் நிறைய பட வாய்ப்புகளை இழந்தேன். பலரும் என்னை திமிர் பிடித்தவர் என நினைத்தனர். மீடியாவில் என்னைப் பற்றி தவறாக பல்வேறு கட்டுரைகள் வந்தன. ஹீரோக்கள் சொல்வதை கேட்காததால் இதுபோன்று தவறான தகவல்கள் பரப்பப்பட்டன.

ஹீரோவுடன் ஈகோ பிரச்சினை அல்லது அவர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள மறுத்தால், படத்தில் இருந்து நீக்கி விடுவார்கள். என்னுடைய சினிமா பயணத்தை முடிவுக்கு கொண்டு வர பலர் முயற்சித்தார்கள். அதில் இருந்து தப்புவது எனக்கு பெரிய விஷயமாக இருந்தது. என்னை எந்த ஹீரோவும் சிபாரிசு செய்ய மாட்டார்கள். ஏனென்றால், நான் பட வாய்ப்புக்காக எந்த ஹீரோவுடனும் படுக்கையை பகிர்ந்து கொள்வதில்லை” என வெளிப்படையாக இந்த விவகாரம் பற்றி ரவீணா பேசியுள்ளார்.

தற்போது பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் கே.ஜி.எப். படத்தின் 2-ம் பாகத்தில் இந்திரா காந்தி வேடத்தில் ரவீணா நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பிரம்மாண்டமாக தயாராகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
ஊரடங்கிலும் யார் டிஆர்பி அதிகம், விஜய், அஜித் ரசிகர்கள் சண்டைஊரடங்கிலும் யார் டிஆர்பி அதிகம், ... விக்ரம் பிரபுவுக்கு ஜோடியான வாணி போஜன் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியான வாணி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
08 ஆக, 2020 - 17:47 Report Abuse
Sankar Ramu கமல் ௯ட நடித்தேன்னு சொன்னாலே போதும்.
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
08 ஆக, 2020 - 17:29 Report Abuse
Malick Raja என்றோ மாத்ருபூதம் ஒரு நடிகையின் கதை என்று ஒரு தொடர் கடந்த காலங்களில் குமுதத்தில் வந்தது 90%. வந்தபின் மானம் கப்பலேறிவிட்டது என்று திரைப்படத்துறையின் பலரும் வருத்தி கொண்டதன் பெயரில் தொடர் நிறுத்தப்பட்டது . நடிகர் சிவகுமார் அந்த கதை முற்றிலும் உண்மை என்றும் சொல்லி விட்டார் என்றோ ... ஆக நடிகைகளின் நிலை சொல்லி மாளாது ..
Rate this:
M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
08 ஆக, 2020 - 16:34 Report Abuse
M Selvaraaj Prabu //நான் பட வாய்ப்புக்காக எந்த ஹீரோவுடனும் படுக்கையை பகிர்ந்து கொள்வதில்லை// நம்பிட்டோம்
Rate this:
rganesan1965 - Nanganallur,Chennai-600 061.,இந்தியா
08 ஆக, 2020 - 12:38 Report Abuse
rganesan1965 இப்ப கொஞ்ச காலமாதான் இந்த கசமுசா. காசு இல்ல, படம் இல்ல, பொழப்பும் வேற கண்ணியமாக போக மனசில்லை...இந்த மாதிரி எண்ணம் உள்ளவங்கதான் இப்படி எல்லாம் பேசுவாங்க. உண்மையில் திரையுலகம் ஒரு கானல் நீர். இது தெரியாம ஏதோ உள்ள வந்து சிக்கிக்கிட்ட மாதிரி எதுக்கு இந்த சீன்? ஏமாறவன் இருக்கும் வரை ஏமாத்துறவனும் இருப்பான். இது இயற்கை. எல்லாமே காசுக்குத்தான். இப்படி பேசற இதே கழிசடைங்க ஒரு நல்ல சான்ஸ் வரட்டும் அப்ப அப்படியே உல்டா ஆயிடுவாங்க.
Rate this:
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
08 ஆக, 2020 - 11:30 Report Abuse
வெற்றிக்கொடிகட்டு வயசான பொறகு சொல்லி என்ன பிரயோஜனம்
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in