Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பிக்பாஸ்' இல்லாத குறையைத் தீர்க்கும் இருவர்

06 ஆக, 2020 - 15:59 IST
எழுத்தின் அளவு:
Vanitha---Meera-solve-the-biggboss-not-having-this-year

தமிழில் இந்த வருடம் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி நடைபெற வாய்ப்பில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாகவே கடந்த வருட 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் போட்டியாளர்களாகக் களமிறங்கிய இருவர் இந்த வருடம் அந்தக் குறையைத் தீர்த்து வைத்துள்ளார்கள்.

'பிக் பாஸ்' என்றாலே சர்ச்சைதான் என்பது மக்கள் மத்தியில் எழுந்துவிட்டது. கடந்த வருட நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகைகள் வனிதா விஜயகுமார், மீரா மிதுன் இருவரும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தினார்கள். மற்றவர்கள் மீது புகார் அளிப்பது, சண்டைக்கிழுப்பது ஆகியவற்றால் இருவரும் கடந்த வருடம் அதிகமாகவே பேசப்பட்டார்கள்.

அப்படியான சர்ச்சைகள்தான் தங்களை மீடியா பக்கம் திருப்புகிறது என இருவரும் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டார்கள் போலிருக்கிறது. வனிதா சொந்தமாகவே ஒரு யு டியூப் சேனலை ஆரம்பித்து அவருடைய திருமணத்தைத் தொடர்ந்த சர்ச்சைகளை அதிகம் வெளியிட்டார். இப்போது அவர் கொஞ்சம் அமைதியாக இருக்கிறார்.

ஆனால் மீரா மிதுன் திடீரென விஜய், சூர்யாவைப் பற்றியும் அவர்களது குடும்பத்தினரைப் பற்றியும் தரக்குறைவாகப் பேசி வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.

கொரோனா பிரச்னைக்கு நடுவே சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் பலத்த விமர்சனங்களுக்கு இருவரும் இந்தாண்டு ஆளாகினர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நாளை மறுநாள் ராணா டகுபட்டி திருமணம்நாளை மறுநாள் ராணா டகுபட்டி திருமணம் முழுதாக முடிக்காத ஏ.ஆர்.முருகதாஸ்? முழுதாக முடிக்காத ஏ.ஆர்.முருகதாஸ்?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in