பிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு! | காப்பி அடிக்கிறேனோ, தமன் கோபம் | விஜய்க்கு சிலை வைத்த கர்நாடக ரசிகர்கள் | பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா? | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் |
பழம்பெரும் காமெடி நடிகர் சந்திரபாவுவின் பிறந்த நாள் நேற்று. ஆனால் அதை பற்றி பேசவோ, யோசிக்கவோ கூட யாருமில்லை. புகழின் உச்சியில் இருந்த சந்திரபாபு கடைசி காலத்தில் மருத்துவ செலவுக்குகூட பணம் இல்லாமல் அரசு மருத்துவமனையில் உயிர் இழந்தார். அவரது உடல் சாந்தோம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
சினிமா வாய்ப்பு கிடைக்காததால் தற்கொலை செய்ய முயன்றார். எம்.ஜி.ஆரை எதிர்த்து நின்றார், கட்டிய மனைவியை முதல் இரவிலேயே அவரது காதலரோடு அனுப்பி வைத்தார். முதல் மாடியில் கார் பார்க்கிங் உடன் வீடு கட்டினார். வீட்டுக்குள் நீச்சல்குளம் கட்டிய நடிகர், கடைசி காலத்தில் மதுவுக்கு அடிமையாகி எல்லாவற்றையும் இழந்தார். இப்படி சந்திரபாபு வாழ்க்கையில் ஒரு பரபரப்பான திரைப்படத்துக்குரிய கண்டன்ட் உள்ளது.
அவரது வாழ்க்கையை சினிமாவாக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இயக்குனர் மிஷ்கின் சந்திரபாவுவின் பிறந்த நாளான நேற்று அவரது கல்லறைக்கு தனது உதவியாளர்களுடன் சென்று அஞ்சலி செலுத்தினார். சந்திரபாபுவின் காதல் கதையை மட்டும் படமாக்கும் ஒரு யோசனை மிஷ்கினிடம் இருக்கிறது. அதன் தொடக்கத்தை இப்படி தொடங்கி இருக்கிறார் என்று சொல்கிறார்கள்.