உணர்ச்சிக் குவியலாய் வந்துள்ள 'பொன்னியின் செல்வன் 2' டிரைலர் | ‛பொன்னியின் செல்வன் 2' இசை வெளியீடு கோலாகலம் : சிவப்பு கம்பள வரவேற்பில் நனைந்த திரைப்பிரபலங்கள் | டப்பிங் யூனியன் சீல் அகற்றம் | ஒய் திஸ் கொலவெறி பாடலுடன் நாட்டு நாட்டு பாடலை ஒப்பிட்ட கீரவாணி | விடுதலை படம் சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது : பவானி ஸ்ரீ | மார்ச் 31ல் ஆர்யாவின் அடுத்த பட டீசர் வெளியீடு | மீண்டும் சர்ச்சையில் நாக சைதன்யா, ஷோபிதா காதல் | போலா 2ம் பாகத்திற்கு லீட் கொடுத்த அபிஷேக் பச்சனின் சர்ப்ரைஸ் என்ட்ரி | இளையராஜா இசையில் ஹிந்தியில் உருவான மியூசிக் ஸ்கூல் | இறப்பதற்கு முன் மஞ்சு வாரியரிடம் இன்னொசென்ட் சொன்ன கடைசி வார்த்தை |
பிரபல வில்லன் நடிகர் சோனுசூட் கொரோனா ஊரடங்கு காலத்தில் தன் சொந்த பணத்தில் பல்வேறு நல்ல காரியங்களை செய்து வருகிறார். குறிப்பாக புலம்பெயர்ந்த தினக்கூலி பணியாளர்களாக வேலை பார்த்தவர்களை அவர்களது சொந்த ஊருக்கு பஸ், ரெயில், விமானத்தில் அனுப்பி வைத்தார். ஆந்திர விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தார். காய்கறி விற்ற பொறியல் பட்டதாரி பெண்ணுக்கு வேலை வாங்கி கொடுத்தார். மேலும் பலருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக கூறியுள்ளார்.
அடுத்தப்படியா ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தவித்த 200 மாணவர்களை சென்னைக்கு தனி விமானத்தில் அழைத்து வந்து உதவி உள்ளார். மாஸ்கோவில் மருத்துவம் படித்து வந்த 200 மாணவர்கள் படிப்பு காலம் முடிந்து நாடு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். அவர்கள் சோனுசூட்டுக்கு தங்கள் நிலைமையை விளக்கி மெயில் அனுப்பி உள்ளனர்.
அதன்பிறகு அவர்களை தொடர்புகொண்டு பேசிய சோனுசூட் அவர்களுக்காக தனி விமானம் ஏற்பாடு செய்து கொடுத்தார். இந்த விமானத்தில் 200 பேர் நேற்று அதிகாலை சென்னை வந்தனர். இவர்களில் 110பேர் ஏற்கெனவே விமான டிக்கெட் எடுத்து விட்டனர். மீதமுள்ள 90 பேருக்கான கட்டணத்தை சோனுசூட் செலுத்தி உள்ளார். விமானத்தில் வந்த மாணவர்கள் விமான பயணத்தில் சோனுசூட்டின் படத்தையும், அவரை வாழ்த்தும் அட்டைகளையும் ஏந்தியபடி வந்தனர்.