சீதை வேடத்தில் நடிக்க அசைவம் தவிர்த்தேன்: கீர்த்தி சனோன் | ஓடிடி வருகையை அன்றே அறிந்தவன் நான்: கமல்ஹாசன் பெருமை | பார்லி., புதிய கட்டடம்! வீடியோ வெளியிட்ட ஷாருக்கானுக்கு மோடி கொடுத்த பதில்! | போலி செய்தியை பரப்புபவர்கள் ஒரு நல்ல புகைப்படத்தையாவது பயன்படுத்துங்கள்! இயக்குனர் உதயநிதி | நினைத்தாலே இனிக்கும் சீரியலில் என்ட்ரியாகும் பிக்பாஸ் தாமரை செல்வி! | நான் கொஞ்சம் 'ரக்கட்': பாம்புவுடன் கொஞ்சி விளையாடும் பார்வதி! | என்.டி.ராமா ராவ் நூற்றாண்டு பிறந்தநாள் | நடிகர் கமல்ஹாசனுக்கு ‛வாழ்நாள் சாதனையாளர்' விருது : ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கினார் | அஞ்சலியின் 50வது படம் 'ஈகை': பர்ஸ்ட் லுக் வெளியீடு | வீரன் படத்தின் 3வது பாடல் நாளை வெளியீடு! |
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். கொரோனா ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தள்ளிப் போயுள்ள படங்களில் இதுவும் ஒன்று. தனுஷ் பிறந்தநாளையொட்டி வெளியான இப்படத்தில் இடம் பெற்றுள்ள ரகிட ரகிட பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சஞ்சனா நடராஜன் நடித்திருக்கிறார். தனுஷ் போன்ற மிகப் பெரிய நடிகருடன் முதன்முறையாக இணைந்து நடிக்கும் போது தனக்கு முதலில் பதற்றமாக இருந்ததாகவும், ஆனால் பின்னர் தனுஷே தனது பதற்றத்தை போக்கி நம்பிக்கை அளித்ததாகவும் கூறியுள்ளார் சஞ்சனா.
அதோடு, 'எந்திரன் படத்தில் வரும் சிட்டி ரோபா மாதிரி தனுஷ். எந்த ஒரு கதாபாத்திரத்தையும் உடனடியாக உள்வாங்கிக்கொண்டு நடிப்பதில் அவர் வல்லவர். அவருடன் நடித்ததில் மிகுந்த சந்தோஷம். இந்த வாய்ப்பை எனக்கு அளித்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவர்களுக்கு நன்றி. முதல் டேக்காக இருந்தாலும் சரி மூன்றாவது டேக்காக இருந்தாலும் சரி அவருடைய எனர்ஜி கொஞ்சம் கூட குறையவே குறையாது' என தனுஷின் நடிப்பை சஞ்சனா பாராட்டியுள்ளார்.