ஆண்ட்ரியாவுக்கு முதன்முறை | சீரியலில் மாஸான என்ட்ரி : வனிதாவின் புது ட்ராக் | அழகு நாயகிகளின் ரீ-யூனியன் | சிகரெட் பிடிக்கும் ‛‛சிவன்'', ‛‛பார்வதி'': லீனாவின் அடுத்த ‛‛குசும்பு'' | பொன்னியின் செல்வன் - குந்தவையாக த்ரிஷா | நரேன் வேடத்தை பெண்ணாக மாற்றிய அஜய் தேவ்கன் | காமெடி நடிகரிடம் மன்னிப்பு கேட்ட அடார் லவ் இயக்குனர் | ஐந்து நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்ட யானை | போக்சோ சட்டத்தில் ‛கும்கி' நடிகர் கைது | சிவாஜி குடும்பத்தில் சொத்து பிரச்னை ; ராம்குமார், பிரபு மீது சகோதரிகள் வழக்கு |
கொரோனாவால் திரைப்பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் (74) இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், கடந்த இரண்டு மூன்று நாட்களாக என் உடல்நிலை சரியில்லை. காயச்சல், சளி போன்ற தொல்லைகள் இருந்தன. இதை எளிதாக எடுத்து கொள்ள விரும்பவில்லை. உடனடியாக மருத்துவமனை சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டேன். லேசாக கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்தனர். வீட்டில் இருந்தபடியே தனிமைப்படுத்தி கொண்டு மருந்துகளை எடுத்து கொள்ள அறிவுறுத்தினார்கள். ஆனால் எனக்கு அப்படி செய்ய மனமில்லை. குடும்பத்தினர் நலன் கருதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.
மருத்துவர்கள் நன்றாக பார்த்து கொள்கிறார்கள். நான் நன்றாக இருக்கிறேன். யாரும் கவலைப்பட தேவையில்லை. யாரும் என்னை தொடர்பு கொண்டு நான் எப்படி இருக்கிறேன் என தெரிந்து கொள்ள வேண்டாம். காய்ச்சல் குறைந்து வருகிறது. சளி தொற்று மட்டுமே உள்ளது. இரண்டொரு நாளில் நானே வீடு திரும்பிவிடுவேன். நிறைய பேர் எனக்கு போய் செய்து நலம் விசாரிக்கிறார்கள். பலரது அழைப்புகளை என்னால் எடுக்க முடியவில்லை. இப்போது நன்றாக ஓய்வு தேவைப்படுகிறது. உங்களின் அனைவரின் அன்புக்கும் நன்றி. நான் நலமாக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி உள்ளார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.