நண்பன் பட வெற்றியை கொண்டாடிய துல்கர் சல்மான் | உதவியாளருக்கு கொரோனா : தனிமைப்படுத்திக் கொண்ட பவன் கல்யாண் | மாநாடு சிம்புக்கு மைல்கல் - தயாரிப்பாளர் | பார்த்திபன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை | ரஜினி பற்றி சூரி கொடுத்த அண்ணாத்த அப்டேட் | மாலத்தீவுக்கு அடுத்த விசிட் நடிகை ஷ்ரத்தா கபூர் | வக்கீல்சாப் : பவன்கல்யாண் நடிப்பை பாராட்டிய மகேஷ்பாபு | விஜய் சேதுபதியை சந்தித்த துருவ் விக்ரம் | ரெண்டகம் படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராப் | அமெரிக்காவில் கர்ணன் படம் பார்த்த தனுஷ் |
மலையாள சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் பாவனா. தமிழில் சில படங்களில் நடித்தாலும் அதிகமான வாய்ப்பு கிடைப்பது மலையாளம் மற்றும் கன்னடத்தில்தான். அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த மிகப்பெரிய சோகத்திற்கு பிறகு அவர் மீண்டெழுந்து, திருமணமும் செய்து கொண்டு நடிக்க தொடங்கியிருக்கிறார்.
கன்னடத்தில் கடைசியாக 96 படத்தில் நடித்தார். இது தமிழ் 96 படத்தின் ரீமேக்தான். இதில் த்ரிஷா கேரக்டரில் அவர் நடித்திருந்தார். தற்போது கன்னடத்தில் இன்ஸ்பெக்டர் விக்ரம், பஞ்சராங்கி 2, கோவிந்தா கோவிந்தா படங்களில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த படங்கள் வெளிவராமல் இருக்கிறது.
இந்த நிலையில் ஸ்ரீகிருஷ்ணாஅட்ஜீமெயில்.காம் என்ற காமெடி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில் அவர் கிருஷ்ணா ஜோடியாக நடிக்கிறார். வழக்கறிஞர் வேடம். திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டூ கெதராக வாழும் ஒரு தம்பதிகள் இடையே எழும் பிர்சசினைகளை காமெடியாக சொல்கிற படம். கொரோன ஊரடங்கிற்கு பிறகு படப்பிடிபப்புகள் தொடங்குகிறது.