'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' படத்தின் டீசர் வெளியானது! | 'டிஜே டில்லு 2' படத்தின் ரிலீஸ் தேதி இதோ! | திமுக ஸ்டிக்கர் ஒட்ட பார்க்கும் உதயநிதி: நடிகை கஸ்தூரி கடும் விமர்சனம் | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரபாஸ்! | குடும்பத்துடன் மலேசியாவுக்கு டூர் சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ்! | இளையராஜாவின் காலில் விழுந்து ஆசி பெற்ற அண்ணாமலை! | சுனைனாவின் ரெஜினா டிரைலர் வெளியானது! | தியேட்டர்களில் அனுமனுக்கு ஒரு 'சீட்' ஒதுக்கீடு: ஆதிபுருஷ் படக்குழு அறிவிப்பு | இந்தியன்-2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா?: ரகசியம் காக்கும் படக்குழு | அஜித்துக்கு வில்லனாகும் அர்ஜூன் தாஸ்? |
ஊரடங்கால் ஏற்பட்ட சோகத்தை, 'வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்' போட்டு, அனுதாபம் வாங்குபவர்கள் மத்தியில், அதே, 'ஸ்டேட்டஸ்' மூலம், பலருக்கு உதவி செய்து வருகிறார், துணை நடிகை தீபா.
இது குறித்து, தீபா கூறியதாவது:ஊரடங்கால், பால் கூட வாங்க முடியாமல், வீட்டில், ஒருவரை ஒருவர் முகம் பார்த்து, நாட்களை நகர்த்தி வந்த குடும்பத்தினர் குறித்து, என், 'வாட்ஸ் ஆப் ஸ்டேட்டசில்' பதிவு செய்து, உதவி கோரினேன்.மலேஷியாவை சேர்ந்த சரசு பெருமாள் என்பவர், அதை பார்த்து, எனக்கு பணம் அனுப்பினார். வேலை பார்த்தபடியே, கைவினைப் பொருள் செய்யும் அவர், 'ஐயம் இட்டு உண்' என்பதை பின்பற்றுபவர்.சொந்த தொழிலில் கிடைத்த லாபத்தை, அப்படியே எனக்கு அனுப்பினார். நான், அதை ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உணவாகவும், பணமாகவும் வழங்கி வருகிறேன்.
இதுவரை, 250 பேருக்கு உணவும், 123 பேருக்கு, தலா, 5 கிலோ அரிசியும் வழங்கிஉள்ளேன். சமீபத்தில், பிறவியிலேயே பார்வை குறைபாடு ஏற்பட்டு, மருந்து வாங்க கூட காசில்லாமல், கஷ்டப்பட்ட சிறுவனுக்கு, தேவையான பண உதவியை, மற்றவர்களிடமிருந்து பெற்று கொடுத்தேன். நயன்தாராவின் ஐரா, தனுஷின் கர்ணன் படத்தில் நடித்துள்ளேன்.சமீபத்தில், 'இருட்டினில் நீதி மறையட்டுமே' என்ற குறும்படத்தில் நடித்தேன்; பலரும் பாராட்டினர்.இவ்வாறு, அவர் கூறினார்.