Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புது கட்டுப்பாடுகளுடன் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம்

04 ஆக, 2020 - 16:45 IST
எழுத்தின் அளவு:
New-conditions-and-rules-in-new-producer-council

தமிழ்த் திரையுலகத்தில் கடந்த ஒரு வார காலமாகவே புதிய தயாரிப்பாளர் சங்கம் பற்றிய கடும் சர்ச்சை எழுந்தது. பல பழைய தயாரிப்பாளர்கள் புதிய சங்கம் உருவாவதற்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

இதனிடையே, நேற்று புதிய சங்கமான தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. உறுப்பினர் சேர்க்கையும் ஆரம்பமானது.

ஏற்கெனவே இருக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் ஒப்பிடுகையில் இந்த புதிய சங்கத்தில் புதிய கட்டுப்பாடுகளை உருவாக்கியிருக்கிறார்களாம்.

பழைய சங்கத்தில் ஒரு படம் எடுத்து சென்சார் சான்றிதழ் பெற்ற தயாரிப்பாளர்கள் மட்டுமே வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள். அப்படி சுமார் 1300 தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். படங்களே தயாரிக்காத அவர்களது நிறுவனத்தை மட்டும் உறுப்பினராகச் சேர்த்துள்ள அசோசியேட் உறுப்பினர்கள் சுமார் 3500 பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் உரிமை இல்லை.

ஆனால், புதிய சங்கத்தில் வாக்களிக்கும் உரிமைக்கு புதிய கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. 5 வருடங்களுக்கு மூன்று படங்களைத் தயாரிப்பவர்கள் முதன்மை உறுப்பினர்கள். இவர்களுக்கு மட்டுமே இந்த சங்கத்திற்கான தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ளது. அதற்கும் குறைவான படங்களைத் தயாரிப்பவர்கள் அசோசியேட் உறுப்பினர்கள்.

சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்படும் போது சங்கத்தைப் பற்றி மேலும் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்குப் படத்திற்கு ஒப்பந்தமான லோகேஷ் கனகராஜ் ?தெலுங்குப் படத்திற்கு ஒப்பந்தமான ... கோலிவுட் மாபியா - விஜய்யை டார்க்கெட் செய்யும் மீரா மிதுன் கோலிவுட் மாபியா - விஜய்யை டார்க்கெட் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

05 ஆக, 2020 - 15:02 Report Abuse
Murphys Law Haahahahhhahha
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in