திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார் | ரஜினி 170வது படத்தில் இணைந்த மஞ்சு வாரியர் | அக்., 5ல் ‛லியோ' டிரைலர் வெளியீடு | வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு |
தன்னைத்தானே சூப்பர் மாடல் என சொல்லிக்கொள்ளும் மாடல் அழகி மீரா மிதுன், தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை தாக்கி டுவிட்டரில் வீடியோ வெளியிட்டு வருகிறார். இதில் அஜித் ஒருவரை மற்றும் புகழ்ந்து தள்ளும் மீரா மிதுன், விஜய், சூர்யா, தனுஷ் மீது நெபோடிசம் குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார்.
இந்த நிலையில் தமிழ் திரையுலகை சேர்ந்த ஒரு முக்கியமான குடும்பம், தயாரிப்பாளர் சங்கத்தை எப்படி ஆட்டிப்படைக்கிறது என்றும், அவர்களை மீறி தயாரிப்பாளர் சங்கம் செயல்பட முடியாமல் இருப்பது குறித்த உண்மையை வெளியிட போகிறேன் என்றும் கூறியுள்ள, அவர் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கூறிய இந்த தகவலை அவரது அனுமதியுடனேயே வெளியிட போகிறேன் என்றும் கூறியுள்ளார்.
இதன்மூலம் மீரா மிதுனின் பின்னணியில் யாரோ ஒரு தயாரிப்பாளர் இருப்பதை அவரே சொல்லாமல் சொல்லிவிட்டார். சமீபகாலமாக தயாரிப்பாளர் சங்கத்தில் நிலவும் போட்டி, முன்னணி நடிகர்களின் கால்ஷீட் கிடைக்காதவர்கள்,முன்னணி நடிகர்களின் படங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இவர்களில் யாரோ ஒரு சிலர் தான், முன்னணி நடிகர்களுக்கு எதிராக மீரா மிதுனை தூண்டிவிட்டு பேச வைக்கிறார்களோ என்கிற சந்தேகம் திரையுலகில் தற்போது எழுந்துள்ளது.