Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ரக்சா பந்தனுக்காக அக்சய் - ஆனந்த் எல்.ராய் மீண்டும் கூட்டணி

04 ஆக, 2020 - 11:50 IST
எழுத்தின் அளவு:
Raksha-Bandhan---Akshay-Anand-L.Rai-team-up-again

நடிகர் தனுஷை கடந்த 2013ல் வெளியான ராஞ்சனா படம் மூலம் பாலிவுட்டுக்கு அழைத்துச் சென்றவர் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஆனந்த் எல் ராய். அந்த படத்தை தொடர்ந்து தற்போது ஏழு வருடங்களுக்கு பிறகு மீண்டும் அட்ராங்கி ரே என்கிற படத்தில் மீண்டும் தனுஷ் ஆனந்த் எல் ராய் கூட்டணி இணைந்துள்ளனர். பாலிவுட் முன்னணி நடிகர் அக்ஷய் குமார் இந்தப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு பாதி முடிவந்துள்ளது. மதுரையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

இந்த நிலையில் திடீரென நேற்று அக்சய் குமார், ஆனந்த் எல்.ராய் கூட்டணியில் 'ரக்சா பந்தன்' என்கிற புதிய பட அறிவிப்பு டைட்டில் போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல 2021 நவம்பர்-5ஆம் தேதி இந்தப்படம் தியேட்டர்களில் வெளியாகும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர். இவர்களது கூட்டணியில் ஏற்கனவே ஒரு படம் பாதி முடிந்த நிலையில் நிற்கும்போது புதிய படத்தை, அதிலும் அடுத்த வருட இறுதியில் வெளியாக இருக்கும் ஒரு படத்தை இப்போதே அறிவித்தது ஏன் என்கிற ஆச்சர்யம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது..

அதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் அக்சய் குமார், “இந்த கதை உங்கள் இதயத்தின் ஆழத்தையே தொடும்.. அதனால் தான் உடனடியாக இந்தப்படத்தை ஒப்புக்கொண்டேன்.. என் திரையுலக வழக்கையிலேயே ரொம்பவே விரைவாக ஒப்புகொண்ட படம் இதுதான்.. ரக்சா பந்தனை முன்னிட்டு எனது அன்பு சகோதரி அல்காவுக்கு இதை சமர்ப்பிக்கிறேன்”” என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
போலீஸ் அதிகாரியை தனிமைப்படுத்திய விவகாரம்: சுஷாந்த் சகோதரி கேள்விபோலீஸ் அதிகாரியை தனிமைப்படுத்திய ... பாலிவுட் நடிகை மினிஷா லம்பா விவாகரத்து பாலிவுட் நடிகை மினிஷா லம்பா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in