பதிரனாவுடன் காதலா? விளக்கமளித்த பாக்கியலெட்சுமி நடிகை | யாஷிகாவுடன் காதலா? - வெறும் புரொமோஷன் தாங்க என்கிறார் ரிச்சர்ட் ரிஷி | பொய் புகார் : பிரான்ஸ் பெண் மீது அறம் இயக்குனர் புகார் | போதையில் நடிகர் கார் மோதி வாலிபர் உயிரிழப்பு | காதலியை கரம்பிடிக்கும் நரேஷ் | நீண்ட இடைவேளைக்குப் பின் சின்னத்திரையில் மீண்டும் களமிறங்கும் சாதனா | சுரேஷ்கோபி படம் மூலம் மீண்டும் மலையாளத்திற்கு திரும்பிய அனுபமா பரமேஸ்வரன் | நேஹா சக்சேனாவும் பரபரப்பு வளையத்தில் சிக்குவாரா? | இறுதிக்கட்டத்தை எட்டிய அர்ஜுன் - நிக்கி கல்ராணியின் மலையாள படம் | 35 வருடங்களுக்குப் பிறகு வைரலான மோகன்லால் - மம்முட்டி தம்பதி |
நடிகர் சிரஞ்சீவியின் குடும்பத்தை ஒரு கை பார்த்துவிடுவது என கங்கணம் கட்டிக்கொண்டது போல இருக்கிறது இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் அடுத்தடுத்த செயல்பாடுகள். சமீபத்தில் சிரஞ்சீவியின் தம்பியான நடிகர் பவன் கல்யாணை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் 'பவர்ஸ்டார்' என்கிற படத்தை எடுத்து ஒடிடியில் வெளியிட்டார். இதற்கே பவன் கல்யாண் ரசிகர்ளிடம் இருந்து ஏகப்பட்ட கண்டனங்கள், அலுவலக தாக்குதல் என எதிர்கொண்டார் ராம்கோபால் வர்மா.
இதோ இப்போது அடுத்ததாக மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மைத்துனரும் நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் பற்றி தான் படம் எடுக்க போகிறாராம். படத்திற்கு அல்லு என டைட்டிலும் வைத்து விட்டார். வழக்கம்போல இதுவும் ஒரு கற்பனை கதை என சொல்லியிருக்கிறார்.
ஆனாலும் “ஒரு பிரபல நடிகர் ஜன ராஜ்ஜியம் என்கிற கட்சி துவங்குவதில் இருந்து கதை ஆரம்பிக்கிறது... அதன் பின்னணியில் சினிமா தயாரிப்பாளரான அவரது மைத்துனர் எப்படி சில முடிவுகளை எடுக்கும் கிங் மேக்கராக இருக்கிறார் என்பததைத்தான் இந்தப்படம் சொல்லப்போகிறது” என கூறியுள்ளார் வர்மா.
இந்த வரிகள் போதாதா அவர் அல்லு அரவிந்த்தைத்தான் குறி வைத்துள்ளார் என்று சொல்தற்கு..? சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியை ஜன ராஜ்ஜியம் ஆக மாற்றிவிட்டார். அதுமட்டுமல்ல படத்திலும், சிரஞ்சீவியின் குடும்பம் சம்பந்தப்பட்ட பிரபங்களின் பெயர்களில் சிறிதாக மாற்றம் செய்து, “அ ஆரவிந்த், கே.சிராஞ்சீவி, ப்ரவன் கல்யாண், அ ஆர்ஜுன், அ சீரீஸ், கே.ஆர் ச்ரரண், என் பீபு” என நக்கலாகவும் குறிப்பிட்டுள்ளார் வர்மா. சிரஞ்சீவியின் குடும்பத்தின் மீது இவ்வளவு கொலைவெறியா ராம்கோபால் வர்மாவுக்கு என ரசிகர்களே அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளனர்.