அஜித் - ஷாலினியின் ரொமான்ட்டிக் போட்டோ வைரல் | 'மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்' கோவை குணா காலமானார் | லண்டனில் ‛பொன்னியின் செல்வன் 2' பின்னணி இசை மும்முரம் | தியேட்டரில் டிக்கெட் விற்பனை செய்த நிவேதா பெத்துராஜ் | 'ஆர்ஆர்ஆர்' ஆஸ்கர் விருதுக்காக நான் செலவு செய்யவில்லை - தயாரிப்பாளர் டிவிவி தனய்யா | சிரஞ்சீவியின் சகோதரர் மகள், கணவருடன் கருத்து வேறுபாடு? | பெண் அரசியல்வாதி என்றால் சேலை தான் கட்ட வேண்டுமா? - மஞ்சு வாரியர் | பிறக்கும்போதே பெற்றோரை குழப்பி விட்டேன் ; ராணி முகர்ஜி கலாட்டா | 130 பேருக்கு 10 கிராம் தங்கம் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | ஏழைகளுக்கு இலவச இருதய சிகிச்சை அறிவித்த பாலகிருஷ்ணா |
பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்த பிரமாண்ட ஆக்ஷன் படமான சாஹோவை இயக்கியவர் சுஜித். 350 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 425 கோடி ரூபாய் வசூல் செய்தது. இது சுஜித்திற்கு இரண்டாவது படமாகும். சர்வானந்த், ஸ்ரத்தா கபூர் நடித்த ரன் ராஜா ரன், இவர் இயக்கிய முதல் படம். அடுத்து அவர் மலையாளத்தில் வெளிவந்த மோகன்லால் நடித்த லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்குவதாக கூறப்பட்டது. தற்போது அவர் விலகி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் சிரஞ்சீவி நடிக்கிறார்.
இந்த நிலையில் சுஜித் தான் நீண்ட நாட்களாக காதலித்து வந்த பல் டாக்டர் பிரபாவள்ளியை திருமணம் செய்ய முடிவு செய்தார். இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த ஜுன் மாதம் நடந்தது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் கொரேனா காலம் நீண்டு கொண்டே போவதால் நேற்று பிரபாவள்ளியை கரம் பிடித்தார் சுஜித். இவர்கள் திருமணம் ஐதராபாத்தில் எளிமையாக நடந்தது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.