எனது திருமணம் ஒரு விசித்திர கதை: ஹன்சிகா | நான் குடிக்கவேமாட்டேன் : ஓட்டேரி சிவா கண்ணீர் பேட்டி | சைலண்டாக நடந்து முடிந்த திருமணம் : பாண்டியன் ஸ்டோர்ஸ் மகேஷுக்கு குவியும் வாழ்த்துகள் | தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் - 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு போட்டி | 'ஏகே 62' யார் தான் இயக்குனர் ? | கியாரா அத்வானி - சித்தார்த் மல்கோத்ரா திருமணம், பிரபலங்கள் வாழ்த்து | விக்ரமின் ‛துருவ நட்சத்திரம்' விரைவில் திரையில் மின்னப் போகிறது | வைரலாகும் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம் | மகிழ்திருமேனிக்கு அஜித் போட்ட உத்தரவு | தனுஷின் வாத்தி டிரைலர் நாளை வெளியாகிறது |
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கால் கடந்த 5 மாதங்களாக சினிமா படப்பிடிப்புகள் எதுவும் நடக்கவில்லை. தியேட்டர்களும் மூடப்பட்டு விட்டது. தற்போது ஆங்காங்கே சில தளர்வுகள் அமுல்படுத்தப்படும் நிலையில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழ அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துரை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியதாவது: சின்னத்திரை கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க 60 பேருடன் படப்பிடிப்பு நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று திரைப்பட படப்பிடிப்பை 70 பேருடன் நடத்திக் கொள்ள அனுமதி கேட்டிருக்கிறார்கள்.
சின்னத்திரை படப்பிடிப்பு என்பது ஒரு அரங்கிற்குள் நடக்கும், சினிமா படப்பிடிப்பு என்பது வெளியிடங்களிலும் நடக்கும், பொது இடங்களிலும் நடக்கும், சினிமா படப்பிடிப்பு நடத்த பல துறைகளிடம் அனுமதி பெற வேண்டும். படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் மக்கள் கூடுவார்கள். இதனால் தான் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கவில்லை. என்றாலும் இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தியேட்டர்கள் திறப்பது பற்றி மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும். சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறையில் தியேட்டர்கள் திறப்பு பற்றி குறிப்பிடப்படவில்லை. இந்த மாதம் தியேட்டர்கள் திறக்க வாய்ப்பு இல்லை. அதன்பிறகு சூழ்நிலையை பொறுத்து முடிவு செய்யப்படும். என்றார்.