ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' பட புதிய போஸ்டர் வெளியீடு | 200 சவரன் நகை கொள்ளை - புதிய புகார் அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | மணிரத்னத்தின் மீதான வழக்கு தள்ளுபடி | ஸ்கை டைவிங்கில் அசத்திய அஞ்சு குரியன் | பிரதமரை சந்தித்த ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட குழுவினர் | சமந்தா நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்கிறாரா? | மதுபான பிசினஸில் இறங்கிய ஷாரூக்கான் மகன் ஆரியன்கான்! | பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மருதநாயகத்தை தூசி தட்டும் கமல் | எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து சொன்ன அஜித்குமார் | தீண்டாமை பிரச்னையா : தியேட்டர் நிர்வாகம் விளக்கம் ; ஊழியர்கள் மீது வழக்குபதிவு |
உண்மையில் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கும், படமே தயாரிக்காமல், தயாரிப்பாளர் சங்கத்தில் இருப்போருக்கும் இடையே ஏற்பட்ட, குஸ்தி காரணமாக, பாரதிராஜா தலைமையில், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற பெயரில், போட்டி சங்கம் உருவாகியுள்ளது.
தமிழ் திரைப்படதயாரிப்பாளர் சங்கத்தில், 1,300 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில், 100க்கும் குறைவானவர்களே, படங்களை தயாரித்து வருகின்றனர்.
கட்டப்பஞ்சாயத்து
கடந்த நிர்வாகத்தில் தலைவராக, நடிகர் விஷால் இருந்தார். அவர் மீது பலர் அதிருப்தியில் உள்ளனர். புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல், கொரோனா ஊரடங்கால் தள்ளி போடப்பட்டுள்ளது. இந்நிலையில், முந்தைய நிர்வாகத்தின் குளறுபடி, இன்சூரன்ஸ் மற்றும் கட்டப்பஞ்சாயத்து என, பல பிரச்னைகள் சங்கத்தில் உள்ளன. தற்போது, ஆன்லைனில் படங்கள் வெளியாவது அதிகரித்துள்ளதால், தயாரிப்பாளர்கள் சிலர், தனி அணியாக பிரிந்து கிடக்கின்றனர்.
இந்நிலையில், நடப்பில் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்காகவும், தேவையில்லாத சுமையை குறைக்கவும், புதிய தயாரிப்பாளர் சங்கத்தை உருவாக்க, பாரதிராஜா உள்ளிட்டோர் ரகசியமாக பேசி வந்தனர். இது குறித்து தகவல் வெளியானதும், முதலில் பாரதிராஜா மறுத்தார். தற்போது, புதிய சங்கம் குறித்த அறிவிப்பை, பாரதிராஜாவே நேற்று வெளியிட்டார்.
அவரது அறிக்கை: கொஞ்சம் வலியோடு தான் துவங்குகிறேன். பிறப்பு அவசியம் என்பதால், பிரசவ வலியை பொறுத்து தான் ஆக வேண்டும். அப்படித் தான் இந்த புதிய சங்கத்தின் பிறப்பும் அவசியமாகிறது. என் கடந்த அறிக்கையில், சக தயாரிப்பாளரிடம் பேசி தான், புதிய சங்கம் குறித்து முடிவு எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தேன். ஆரம்ப கட்டத்திலேயே செய்திகள் காற்றில் கசிந்து, கருத்து வேறுபாடுகளை பரப்பி விட்டது.
கேள்விக்குறி
இப்போதைய சூழலில், இன்னொரு சங்கம் அவசியமாகிறது. பட வெளியீடுகள், பணம் போட்டவர்களின் அபாய நிலை, எதிர்காலக் கேள்விக்குறி எல்லாவற்றுக்கும் பதில் தேடுவது முக்கியம். தாய் சங்கத்தை உடைக்கவில்லை. அவள் அப்படியே மெருகுற இருப்பாள். திரை வீட்டின் ஆளுமை அவள் தான்; சங்கத்தை பிரிக்கவில்லை. கொரோனாவால் பாதித்த சினிமாவை, மருந்து கொடுத்து சரியாக்க வேண்டிய நேரமிது. சில முக்கிய முடிவுகளுக்காக உழைக்க உள்ளோம்.
அதனால், புதிதாக, தமிழ் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிர்வாகிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. என் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை தொடங்கி விட்டது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
புதிய சங்கத்தின் அவசியம் குறித்து, திரையுலகினர் கூறியதாவது: ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ள தயாரிப்பாளர் சங்கத்தில், 100 பேர் கூட, தற்போது படத் தயாரிப்பில் ஈடுபடுவதில்லை. மேலும், உறுப்பினர்களுக்கான, இன்சூரன்ஸ் போன்ற பல விஷயங்கள், சங்கத்திற்கு கூடுதல் சுமையாகி விட்டன.
வெட்டி பேச்சு
பணத்தை போட்டு படம் எடுப்பவர்கள் தான், அதிக சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது. படமே தயாரிக்காமல், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களும், வெட்டி பேச்சு பேசுபவர்களும் நிறைய பேர் உள்ளனர். படம் தயாரிப்பவர்களின் கஷ்டத்தை தீர்க்கவும், பட வெளியீட்டை கட்டுப்பாட்டோடு எளிமையாக்கவும், படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு உதவவுமே, இச்சங்கம் உருவாகியுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.