மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக இரு நடிகைகள் | ரசிகர்களை சந்தித்த தனுஷ் | மீண்டும் தமிழுக்கு வருகிறார் பாவனா | பீச் மணலில் அஞ்சனாவின் போட்டோஷூட் | தமிழுக்கு வரும் கிரேஸ் ஆண்டனி | ஹன்சிகாவின் புதிய திரில்லர் படம் துவக்கம் | கருணாஸ் மகள் திருமணம் | கமலை சந்தித்த பிக்பாஸ் டைட்டிலை இழந்த விக்ரமன் | 'கேஜிஎப் 2' வசூலை முறியடித்து 2ம் இடம் பிடித்த 'பதான்' | ‛விடுதலை' பாடல் ; நன்றி சொன்ன சூரி - 'லவ் யு' சொன்ன தனுஷ் |
ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தில் சசிகுமார் மனைவியாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய் ஜோடியாக 'மாஸ்டர்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதமே 'மாஸ்டர்' படம் வெளிவந்திருக்க வேண்டும். ஆனால், கொரானோ ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் படம் வெளியாகவில்லை. எப்போது வெளிவரும் என்பதும் சொல்ல முடியாத நிலையில் உள்ளது.
இதனிடையே, இன்று பிறந்தநாள் கொண்டாடும் மாளவிகாவிற்காக அவருடைய ரசிகர்கள் 'காமன் டிபி' ஒன்றை டுவிட்டர் தளத்தில் வெளியிட்டனர். அதை 'மாஸ்டர்' பட இயக்குனர் லோகேஷ் கனகராஜும் வெளியிட்டார்.
அவருக்கு நன்றி தெரிவித்த மாளவிகா மோகனன், “இந்த பிறந்தநாளை 'மாஸ்டர்' டீமுடன் சென்னையில் கொண்டாட வேண்டும் என்று நினைத்திருந்தேன், ஆனால், ஸ்டுப்பிட் கோவிட்” என கோபப்பட்டு பதிவிட்டுள்ளார்.
'மாஸ்டர்' படம் மட்டும் திட்டமிட்டபடி வெளியாகியிருந்தால் மாளவிகாவின் இந்த வருடப் பிறந்தநாள் கொண்டாட்டம் அவருக்கு மறக்க முடியாத ஒன்றாக அமைந்திருக்கும். அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை கோவிட் கெடுத்துவிட்டதுதான் அவருக்கு கோபமாகிவிட்டது.