Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹிருத்திக் ரோஷன் வாழ்த்து - வாயடைத்து போன டாப்ஸி

03 ஆக, 2020 - 13:33 IST
எழுத்தின் அளவு:
Taapsee-dumbfounded-of-Hrithik-roshans-wish

நடிகைகள் கங்கனா ரணவத், டாப்சி ஆகியோருக்கு இடையே நடக்கும் சண்டைதான் பாலிவுட்டில் தற்போது இருக்கும் ஒரு முக்கியமான பரபரப்பு. டாப்சி அவருடைய பிறந்தநாளை இரண்டு தினங்களுக்கு முன்பு ஆகஸ்ட் 1ம் தேதியன்று கொண்டாடினார். ஆனால், அன்றைய தினம் எந்த வாழ்த்தையும் சொல்லாமல் நேற்று நண்பகலில் திடீரென டாப்சிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி இருக்கிறார் ஹிருத்திக் ரோஷன்.

டாப்சி பிறந்த நாளுக்கு ஹிருத்திக் வாழ்த்து சொல்லியிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.

“ஒரு ரசிகனாக கூறுகிறேன், இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் டாப்சி. சூப்பர் டூப்பரான வருடமாக அமைய வாழ்த்துகள்” என்று ஹிருத்திக் வாழ்த்தியதற்கு, “இந்த ஒரு மெசேஜால் நான் முற்றிலும் வாயடைத்து போய்விட்டேன். இதற்கு எப்படி சரியாக பதிலளிக்க வேண்டும் என்று கூடத் தெரியவில்லை. இருப்பினும் இது என்னுடைய முந்தைய பிறந்தநாள் பரிசாக மாறும். உங்களை நான் எவ்வளவு மதிக்கிறேன் என்பது தெரியும், நீங்கள் மீண்டும் வலியுறுத்தத் தேவையில்லை,” என அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் டாப்சி.

தற்போது கங்கனா ரணவத்தை டாப்சி தீவிரமாக எதிர்த்து வரும் நிலையில் ஹிருத்திக்கின் இந்த திடீர் வாழ்த்தை பாலிவுட்டினர் வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு ஹிருத்திக், கங்கனா இடையே நடந்த மோதல் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதற்காகவே கங்கனாவை வெறுப்பேற்றும் விதத்தில் டாப்சிக்கு ஹிருத்திக் வாழ்த்து தெரிவித்திருக்கலாம் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ராகு தரிசனத்திற்குப்பின் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்?ராகு தரிசனத்திற்குப்பின் நயன்தாரா - ... ரக்ஷா பந்தன் கொண்டாடும் ஹீரோயின்கள் ரக்ஷா பந்தன் கொண்டாடும் ஹீரோயின்கள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in