Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சென்னையில் மட்டும் 'அண்ணாத்த' படப்பிடிப்பு?

03 ஆக, 2020 - 11:31 IST
எழுத்தின் அளவு:
Annatha-shooting-only-at-Chennai

'சிறுத்தை' சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் படம் 'அண்ணாத்த'. இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது. அதன்பின் கொரோனா வந்த காரணத்தால் கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, இப்படம் பற்றி பல்வேறு விதமான வதந்திகள் உலா வந்தன. படம் நிறுத்தப்பட்டுவிட்டது என்றும் கூட பரபரப்பாகப் பேசினார்கள். கொரோனா தொற்று முழுவதுமாக ஒழிந்தபின்தான் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என ரஜினிகாந்த் சொன்னதாகவும் செய்திகள் வெளிவந்தன.

எப்படியும் அடுத்த சில மாதங்களில் இந்த நோய் தொற்று முற்றிலுமாக ஒழிந்துவிடும் என பலர் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். 'அண்ணாத்த' படப்பிடிப்பு ஐதராபாத், புனே ஆகிய இடங்களில் நடத்தத்தான் முடிவெடுத்திருந்தார்களாம். ஆனால், தற்போது எஞ்சிய படப்பிடிப்புகள் அனைத்தையும் ரஜினிகாந்தின் வசதிக்காக சென்னையிலேயே நடத்த முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக சென்னையிலேயே அரங்குகளை அமைக்க உள்ளார்களாம். ரஜினிகாந்த் எப்போது வர சம்மதிக்கிறாரோ அப்போது மட்டுமே படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகம் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
அஜித்தை விட ஐந்து வயது சிறியவள் நான் : ரசிகருக்கு கஸ்தூரி  பதிலடிஅஜித்தை விட ஐந்து வயது சிறியவள் நான் ... நண்பர்கள் தினம் - நண்பர்களுடன் வீடியோ காலில் விஜய் அரட்டை நண்பர்கள் தினம் - நண்பர்களுடன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Mani . V - Singapore,சிங்கப்பூர்
04 ஆக, 2020 - 07:05 Report Abuse
Mani . V கரெக்ட் "சிஸ்டம்". இப்படித்தான் இருக்கோணும்.
Rate this:
அன்பு - தஞ்சை,இந்தியா
04 ஆக, 2020 - 05:54 Report Abuse
அன்பு ரஜினிக்கு பதில் டூப் நடிப்பார். ரஜினியின் பெயரை உபயோகப்படுத்தி கொள்ள மட்டும் ரஜினி நூறு கோடி வாங்கி கொள்வார் என்ற டீலில் படப்பிடிப்பு நடக்கும்.
Rate this:
Ram - Thanjavur,இந்தியா
03 ஆக, 2020 - 20:29 Report Abuse
Ram varum ana varathu
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in