Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஹெலன் இந்தி ரீமேக்கில் ஜான்வி கபூர்

02 ஆக, 2020 - 20:35 IST
எழுத்தின் அளவு:
Jhanvi-kapoor-in-helen-remake

மலையாளத்தில் வெளியாகும் சில படங்கள் எல்லா மொழிகளுக்கும் பொருந்தும் யுனிவர்சல் அமசங்களுடன் அமைந்துவிடுவது வழக்கம்.. பிரித்விராஜ் நடித்த அய்யப்பனும் கோஷியும் படம் அந்த ரகம் தான்.. அதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் சின்ன பட்ஜெட்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஹெலன்' படமும் தற்போது தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது ஹிந்தியிலும் ரீமேக்காக இருக்கிறது.

தமிழில் அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் நடிக்க, இயக்குனர் கோகுல் இயக்கவுள்ளார். இதேபோல இந்தப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். பிவிபி நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தை ஹனுமான் சவுத்ரி என்பவர் இயக்கவுள்ளார். தற்போது இந்தப்படத்தின் இந்தி ரீமேக்கில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க இருக்கிறார் என்றும் அவரது தந்தை போனி கபூரே இந்தப்படத்தை தயாரிக்க இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. .

மலையாளத்தில் பிரபல நடிகர் வினீத் சீனிவாசன் தயாரித்திருந்த இந்தப்படத்தை மாத்துக்குட்டி சேவியர் என்பவர் இயக்கி இருந்தார். அன்னா பென் என்பவர் கதாநாயகியாக நடித்திருந்த இந்தப்படம் ஷாபிங் மாலில், ஒரு குளிரூட்டும் அறையில் இரவு முழுதும் சிக்கிக்கொண்ட ஒரு பெண்ணை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இருந்தது. இந்தப்படத்தின் ரீமேக்கில் நடிக்கும் கதாநாயகிகள் அனைவருக்குமே இந்தப்படத்தில் நடிப்பது சவாலான ஒன்றாகவே இருக்கும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆலியா பட் அணியும் மாஸ்க் விலை என்ன தெரியுமா?ஆலியா பட் அணியும் மாஸ்க் விலை என்ன ... சுஷாந்த் தற்கொலையில் இழுக்கப்படும் அரசியல்வாதி சுஷாந்த் தற்கொலையில் இழுக்கப்படும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in