Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகிழ்மதி பெயரில் புதிய இயக்கம் தொடங்கினார் சத்யராஜ் மகள் திவ்யா!

02 ஆக, 2020 - 20:17 IST
எழுத்தின் அளவு:
Divya-Sathyaraj-starts-new-movement

நடிகர் சத்யராஜின் திரை வாழ்க்கையில் முக்கியமான படம் பாகுபலி. இப்படத்தில் அவர் நடித்திருந்த கட்டப்பா கதாபாத்திரம் அவருக்கு இந்திய அளவில் மேலும் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. பாகுபலி படத்தில் மகிழ்மதி தேசத்தில் தான் கதைக்களம் நடைபெறும்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் குறைந்த வருமானத்தில் வாழ்பவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் மகிழ்மதி என்ற பெயரில் புதிய இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளார் சத்யராஜின் மகளான மருத்துவர் திவ்யா. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"இந்தியாவில் ஒர் ஆண்டின் கணக்கின்படி பத்து மில்லியன் திருமணங்கள் நடைப்பெறுகின்றன. அத்திருமணவிழாக்களில் பரிமாறப்படும் முப்பது விழுக்காடு உணவு விணாகின்றன". உணவும், ஊட்டச்சத்தும் வசதியுள்ளவர்களுக்கு மட்டும்தான் என்பது நியாயம் இல்லை. வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பத்தினரும், குழந்தைகளும் கொரோனா போன்ற தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டுமாயின் அவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவு தேவை.

“மகிழ்மதி இயக்கம் அரசியல் கட்சியோ, சாதி, மதம் சார்ந்த அமைப்போ கிடையாது. வறுமைக்கோட்டிற்குக் கீழ் இருக்கும் பகுதிகளில் ஊட்டச்சத்து நிறைந்த உணவை இலவசமாக வழங்க உருவாக்கப்பட்ட ஓர் இயக்கம் கொரோனா ஊரடங்கு நேரத்தில் வேலைகளுக்குச் செல்ல முடியாமல் வறுமையில் வாடும் குடும்பங்களுக்குத் தரமான உணவு வழங்குகிறோம். கொரோனா நேரத்தில் மட்டும் இல்லாமல் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை இவ்வியக்கம் மேற்கொள்ளும்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தொழிலதிபருடன் லிவிங் டுகெதரா? : ஜூலி கோபம்தொழிலதிபருடன் லிவிங் டுகெதரா? : ஜூலி ... கவர்ச்சிப் போட்டோக்களால் கவனம் ஈர்த்த இளம் நடிகை கவர்ச்சிப் போட்டோக்களால் கவனம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Kumar Senthil - Raleigh,யூ.எஸ்.ஏ
04 ஆக, 2020 - 23:31 Report Abuse
Kumar Senthil நல்ல விசியம். நல்லது நடக்கட்டும். தொண்டாற்றி இன்பம் காண்போம். வாழ்க வளமுடன்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in