நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் | துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா |
கடந்த ஜூன் மாத செய்திகளில் பரபரப்பாக பேசப்பட்டவர் நடிகை பூர்ணா.. திருமண மோசடி கும்பலிடம் இருந்து தப்பித்ததுடன், அவர்கள் மீது புகார் அளித்து அந்த கும்பலின் மொத்த நெட்வொர்க்கும் பிடிபட காரணமாக அமைந்தார். இதனால் ஏற்பட்ட பதட்டம் இன்னும் நீங்காததால் தற்போது திருமண எண்ணத்தை ஒத்தி வைத்துவிட்டு படங்களில் மட்டும் கவனம் செலுத்த இருக்கிறார்.
கடந்த 2018-ல் மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான ஜோசப் என்கிற படத்தின் தமிழ் ரீமேக்கில் தற்போது நடித்துள்ளார் பூர்ணா. இதுபற்றிய தகவலை சமீபத்தில் வெளியிட்டுள்ள பூர்ணா, இன்னும் நான்கு நாள் படப்பிடிப்பு மட்டுமே இருந்த சூழலில் தான் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என கூறியுள்ளார்.
மலையாளத்தில் கதையின் நாயகனாக குணச்சித்திர நடிகர் ஜோஜூ ஜார்ஜ் என்பவர் நடித்திருந்த கதாபாத்திரத்தில் தமிழில் ஆர்கே சுரேஷ் நடித்துள்ளார்.. அவரது மனைவியாகத்தான் பூர்ணா நடித்துள்ளார். இயக்குனர் பாலா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தை மலையாளத்தில் இயக்கிய பத்மகுமார் தான் தமிழிலும் இயக்கியுள்ளார்.. இந்தப்படத்திற்கு இயக்குனர் ஜான் மகேந்திரன் வசனம் எழுதியுள்ளார்.