Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நட்பை பறைசாற்றும் படங்களும் டிவி தொடர்களும்

02 ஆக, 2020 - 19:58 IST
எழுத்தின் அளவு:
Friendship-day-movie

ரத்த சம்பந்த உறவுகளை விட நட்பு உறுதியானது, யாரோ முன்பின் தெரியாதவருடன் ஏற்படும் நட்பு கடைசி வரை நம் கூடவே வரும் என நட்பை பற்றி சினிமாக்களும் டிவி நிகழ்ச்சிகளும் தொடர்ந்து அழுத்தமாக பதிவு செய்து வருகின்றன. திரைப்படங்களும் டிவி நிகழ்ச்சிகளும் இந்த சமூகத்தையே பிரதிபலிப்பதாக சொல்லப்பட்டாலும் உண்மையில் அவை நம் நட்பை, உறவுகளின் பிணைப்பை காட்டும் ஒரு கண்ணாடியாகத்தான் இருக்கின்றன. சொல்லப்போனால் நம்மில் பலருக்கும் நட்பு பற்றிய ஒரு ஐடியாவே இதுபோன்ற புனைவு கதைகளில் இருந்துதான் தோன்றுகின்றன. இந்த நண்பர்கள் தினத்தை கொண்டாடும் விதமாக நட்பை பறை சாற்றிய அப்படிப்பட்ட 5 ஹாலிவுட் படங்களையும் தொடர்களையும் இப்போது பார்க்கலாம்.

ஷஷாங்க் ரிடெம்ப்சன்
நம்பிக்கை, சுதந்திரம் மற்றும் விடாமுயற்சியின் மொத்த கதையாக உருவான படம் தான் ஷஷாங்க் ரிடெம்ப்சன். இந்தப்படத்தின் கருவானது ரெட் மற்றும் ஆண்டி இருவருக்கும் இடையேயான நட்பை பற்றியதாக மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், ரசிகர்களிடம் இந்தப்படம் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தி இருக்காது. கடுமையான சிறை வாழ்க்கையில் இந்த கைதிகள் இருவருக்கும் நட்பு ஒன்றே மிகப்பெரிய ஆறுதலாக இருக்கிறது.

தி லார்ட் ஆப் தி ரிங்க்ஸ்
மூவுலகையும் ஆளும் சர்வ வல்லமையைத் தரக்கூடிய ஒரு மோதிரத்தை அழிப்பதற்காக, மனித இனத்திலேயே உடல் பலவீனமான குள்ள உருவம் கொண்ட இனத்தை சேர்ந்த ப்ரோடோ மேற்கொள்ளும் சாகஸப் பயணம் தான் இதன் கதை.. அவன் தான் கருப்பு கடவுள் சௌரனுக்கு எதிரான போரில் வெல்லப்போகிறவன் என்று அப்போது தெரியாது.. தன்னுடைய பயணம் முழுதும் தனது மார்பில் கிடக்கும் அந்த சுமை மிகுந்த பொருளை அவன் தான் சுமந்து செல்கிறான். ஆனால் ஒவ்வொரு சிக்கலில் இருந்தும் ப்ரோடோவை காப்பாற்றி அவன் யாரென்பதை அவனையே உணர செய்யும். அவனுடைய நம்பிக்கையான நண்பன் சாம்வைஸ் கேம்ஜி உடன் இல்லாவிட்டால், இதை அவனால் செய்து முடித்திருக்க முடியாது.. ஒரு கட்டத்தில் ப்ரோடோவே, “சாம் இல்லையென்றால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது” என்று சொல்வதை வைத்தே அவர்கள் நட்பின் ஆழத்தை உணரலாம்.

டாய் ஸ்டோரி
அனிமேஷன் வகை படங்களில் மட்டுமே பொம்மைக்கும் மனிதனுக்குமான நட்பை பார்க்க முடியும். அதேசமயம் அது பார்க்கும்படியாகவும் நிஜத்தை போல் உணரும்படியாகவும் உருவாக்கப்பட்டிருக்கும். அதனால்தான் பொம்மை கதை படங்கள் மிக முக்கிய அம்சமாக கருதப்படுகின்றன. ஆனால் அவை முதல்தரமான அனிமேஷனுக்காக அல்லாமல், பொம்மைகளுக்கும் அவைகள் உணர்வே இல்லாதவை என்று கூட தெரியாத மனிதர்களுக்குமான உறவை சொல்லும் அந்த படங்களின் உணர்வுப்பூர்மான மையக்கருவுக்காகத்தான் சிறப்பு பெறுகின்றன.. டாய் ஸ்டோரி கதையும் அப்படிப்பட்ட நட்பை சொல்லும்.

ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் (டிவி ஷோ)
நெட்பிளிக்ஸின் சாகச புனைவு கதை தான் ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ். காணாமல் போகும் சிறுமியை தேடும் ஒரு சிறுவனும், அவனுடையை நண்பர்களும், தடுமாற்றம் கொண்ட ஒரு போலீஸ்காரரும் தான் இந்தக்கதையின் முக்கிய நடிகர்கள். ஜிம் ஹோப்பர் என்கிற அந்த காவலராக டேவிட் ஹார்பர் நடித்திருப்பார். தன்னுடைய வயதையொத்த நண்பனுக்கு உதவுவதற்காக காணாமல் போன லெவன் என்கிற சிறுமியை தேடும் அந்த சிறுவர்களின் நடிப்பு மற்றும் நட்பு பிரமிக்க வைக்கும்.

லெஜண்ட்ஸ் ஆப் டுமாரோ

துப்பறியும் காமிக்ஸ் கதைகள் எல்லாவற்றையும் சீரியசாகவே எடுத்துக் கொள்வதாக குற்றம் சாட்டப்பட்டால், இதே துப்பறியும் காமிக்ஸ் பாணியில் எடுக்கப்பட்ட லெஜண்ட்ஸ் ஆப் டுமாரோ படம் எந்த ஒரு விஷயத்தையும் கொஞ்சம் கூட சீரியஸாக எடுத்துக்கொள்ளாத படம் என்று சொல்லாம். இந்த காமிக்ஸ் புத்தக தொகுப்புகள் அதீத நகைச்சுவையுடனும் நம்மை குழப்பி முட்டாளாக்க செய்யும் விதமாகவும் இருக்கின்றன. ஆனாலும் இதிலும் ஒரு ஆழமான நட்பு இருக்கும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனாவிலிருந்து மீண்ட அமிதாப் வீடு திரும்பினார்: தொடர் சிகிச்சையில் அபிஷேக்!கொரோனாவிலிருந்து மீண்ட அமிதாப் வீடு ... ஜோசப் ரீமேக்கில் ஆர்.கே.சுரேஷ் ஜோடியாக பூர்ணா ஜோசப் ரீமேக்கில் ஆர்.கே.சுரேஷ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in