Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொரோனாவிலிருந்து மீண்ட அமிதாப் வீடு திரும்பினார்: தொடர் சிகிச்சையில் அபிஷேக்!

02 ஆக, 2020 - 17:41 IST
எழுத்தின் அளவு:
Amitab-bachan-recovered-from-corona,-discharged-from-hospital-abhishek-still-in-treatment

கொரோனா தொற்று காரணமாக ஜூலை 11-ம் தேதி இரவு பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும், அவரது மகன் அபிஷேக் பச்சனும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதற்கு அடுத்த சில நாட்களிலேயே அபிஷேக்கின் மனைவியான ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அவர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விரைவாக குணமடைந்த ஐஸ்வர்யாவும், ஆரத்யாவும் சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். தொடர்ந்து அமிதாப்பும், அபிஷேக்கும் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்தனர்.

இந்நிலையில் தற்போது அமிதாப் பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். இதனை அவரது மகன் அபிஷேக் அதிகாரப்பூர்வமாக சமூகவலைதளம் மூலம் அறிவித்துள்ளார்.வீடு திரும்பிய அமிதாப் ஓய்வில் இருந்து வருவதாக அபிஷேக் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலால் அமிதாப் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்ந்து அபிஷேக் மட்டும் மருத்துவமனையில் தங்கி கொரோனா சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் அவரும் குணமாக வேண்டுமென ரசிகர்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.


அமிதாப் நன்றி
சமூகவலைதளத்தில் அமிதாப் கூறுகையில், இன்று(ஆக.,2) எனக்கு கொரோனா பரிசோனை மேற்கொண்டனர். அதில் நெகட்டிவ் என வந்தது. இதனால் மருத்துமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டேன். எனது அறையில் சில நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள உள்ளேன். கடவுளின் அருளாலும், அன்பான நண்பர்கள், ரசிகர்களின் வேண்டுதல் மற்றும் மருத்துவமனையில் என்னை நன்றாக பார்த்துக் கொண்ட டாக்டர்கள், செவிலியர்களால் தான் குணமாகி உள்ளேன். உங்கள் அனைவருக்கும் எனது இருகரம் கூப்பி நன்றி சொல்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பழங்கால இளவரசியாக அசத்தும் மாளவிகா மோகனன்பழங்கால இளவரசியாக அசத்தும் மாளவிகா ... நட்பை பறைசாற்றும் படங்களும் டிவி தொடர்களும் நட்பை பறைசாற்றும் படங்களும் டிவி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in