Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புதிய தயாரிப்பாளர் சங்கத்தில் மாற்றம் ?

02 ஆக, 2020 - 14:48 IST
எழுத்தின் அளவு:
Changes-in-New-producers-council

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தற்போது தனி அதிகாரி தலைமையில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் செயல்பாட்டில் இல்லை. கடைசியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விஷால் தலைமையிலான நிர்வாகம் மீது புகார் கூறி அந்த சங்கத்தை முடக்கினர் சிலர்.

இந்நிலையில் அடுத்த தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்க ஆரம்பித்து, கொரானோ தொற்றால் அது மேலும் தாமதமாகி வருகிறது. இதனிடையே, தற்போது படமெடுத்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் சிலர் அவர்களது பிரச்சினைகளை பேசித் தீர்ப்பதற்காக புதிய சங்கத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினர். ஆனால், அதற்கு தற்போது படங்களைத் தயாரிக்காத பழைய தயாரிப்பாளர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதனால், புதிய சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளதாகச் சொல்லப்பட்ட இயக்குனர் பாரதிராஜா நேற்று ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனாலும், புதிய சங்கம் ஆரம்பமாவது நிற்காது என்கிறார்கள். பாரதிராஜா விரும்பவில்லை என்றால் அவர் தலைவராகத் தொடர வேண்டாம். கவுரவத் தலைவராக வேண்டுமானால் இருந்து கொள்ளட்டும் என்று ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாம்.

புதிய சங்கம் ஏற்கெனவே இருக்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு போட்டியான ஒரு சங்கம் அல்ல. நடைமுறைப் பிரச்சினைகள், சில செயல்பாட்டு சிக்கல்கள் ஆகியவற்றை உடனடியாகப் பேசித் தீர்க்க இப்படி ஒரு சங்கம் அவசியம் என அவர்கள் தரப்பில் வாதங்களை வைக்கிறார்களாம். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் புதிய சங்கத்தை ஆரம்பிப்பதில் இருந்து அவர்கள் பின்வாங்கப் போவதில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எல்லா மினுமினுப்பும் மங்கினாலும்.... அஞ்சலியின் பொன்மொழிஎல்லா மினுமினுப்பும் மங்கினாலும்.... ... பழங்கால இளவரசியாக அசத்தும் மாளவிகா மோகனன் பழங்கால இளவரசியாக அசத்தும் மாளவிகா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in