Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இன்று பிறந்த நாள்: 160 படங்களில் நடித்த வாணிஸ்ரீ

02 ஆக, 2020 - 13:16 IST
எழுத்தின் அளவு:
Actress-Vanisri-birthday-today

ஆந்திர மாநிலம் நெல்லூரில் 1948ம் ஆண்டு ஆகஸ்ட் 3 தேதி பிறந்தவர் ரத்ன குமாரி எனும் வாணிஸ்ரீ, இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். வாணிஸ்ரீ என்ற உடனேயே நம் நினைவுக்கு வருவது வசந்த மாளிகைதான். ஏழையாக இருந்தாலும் தன் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காத லதாவை இப்போதும் மறக்க முடியாது. அவர் தமிழில் 43 படங்களில் நடித்திருந்தாலும், பெரும்பாலானவை வெற்றிப் படங்கள்.

சிவாஜியுடன் நடித்த உயர்ந்த மனிதன் (1968), நிறை குடம் (1969), வசந்த மாளிகை (1972), சிவகாமியின் செல்வன் (1974), வாணி ராணி (1974) மற்றும் நல்லதொரு குடும்பம் (1979) படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள்தான். எம்.ஜி.ஆருடன் நடித்த கண்ணன் என் காதலன், ஊருக்கு உழைப்பவன், தலைவன் படங்களும் வெற்றிப் படங்கள்தான்.

தெலுங்கில் 115 படங்களில் நடித்துள்ளார். அதில் இத்தரு அம்மாயிலு (1972), கங்கா மங்கா, சீவனா சோதி (1975), மற்றும் சில்பி கிருட்டிணடு (1978) போன்ற படங்களில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். ஹீரோயினாகவே 160 படங்களில் நடித்துள்ளார் வாணிஸ்ரீ. தற்போதும் தெலுங்கில் அம்மா, பாட்டி வேடங்களில் நடித்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஏழை மாணவிக்கு ஐபோன் வாங்கிக் கொடுத்த டாப்ஸிஏழை மாணவிக்கு ஐபோன் வாங்கிக் ... எல்லா மினுமினுப்பும் மங்கினாலும்.... அஞ்சலியின் பொன்மொழி எல்லா மினுமினுப்பும் மங்கினாலும்.... ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in