பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
ரஜினி நடித்த சந்திரமுகி படம் 800 நாட்களுக்கு மேல் ஓடி சரித்திர சாதனை படைத்தது. இதனை பி.வாசு இயக்கி இருந்தார். இது ஆப்தமித்ரா என்ற மலையாள படத்தின் ரீமேக் ஆகும். இந்தப் படத்தின் 2ம் பாகத்தை பி.வாசு கன்னடத்தில் இயக்கி உள்ளார். தமிழில் இதன் 2ம் பாகத்தை ராகவா லாரன்ஸ் வைத்து இயக்குகிறார்
இந்தப் படத்தில் சந்திரமுகியாக ஜோதிகா நடித்த கேரக்டரில் ஜோதிகாவே நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. இதனை அவர் மறுத்தார். பிறகு சிம்ரன் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. சிம்ரனும் மறுத்தார். கடைசியாக கியாரா அத்வானி நடிப்பதாக கூறப்பட்டது. இதனை ராகவா லாரன்ஸ் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது: சந்திரமுகி 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா, சிம்ரன் மற்றும் கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக வரும் செய்திகள் அனைத்தும் வதந்திகள் ஆகும். தற்போது ஆரம்பகட்ட திரைக்கதை வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த கொரோனா சூழ்நிலை முடிவு பெற்ற பிறகே தயாரிப்பு நிறுவனம் மூலம் அது பற்றி அதிகாரபூர்வமாக வெளியிடப்படும். என்கிறார் ராகவா லாரன்ஸ்.