பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'கைதி'. விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்ற படம்.
இப்படம் கனடாவில் ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெற உள்ள டொரன்டோ சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. இப்படத்துடன் நானி நடித்த தெலுங்குப் படமான 'ஜெர்சி', பகத் பாசில் நடித்த மலையாளப் படமான 'டிரான்ஸ்', ஹிருத்திக் ரோஷன் நடித்த 'சூப்பர் 30' ஆகிய படங்களும் திரையிடப்பட உள்ளன.
கனடா திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வானது குறித்து 'கைதி' பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், “இதை ஷேர் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி. மொத்த குழுவினருக்கும் பெரிய நன்றி” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
'கைதி' படம் கடந்த வருடம் வெளிவந்த சிறந்த படங்களில் ஒன்றாக தமிழ் ரசிகர்களாலும் பாராட்டப்பட்டு கொண்டாடப்பட்ட படம்.