பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
நடிகை விஜயலட்சுமி, இயக்குனரும், அரசியல் கட்சி தலைவர் சீமான் மீதும், ஜாதி தலைவர் ஹரி நாடார் மீதும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்ற அவர் பின்னர் அதிலிருந்து தப்பினார். சீமான் என்னோடு சமாதானம் பேசினால் எல்லா பிரச்சினைகளையும் முடித்துக் கொள்ளத் தயார் என்றும் கூறினார்.
இந்த நிலையில் விஜயலட்சுமி நேற்று திருவான்மியூரில் உள்ள தனது வீடு அமைந்திருக்கும் தெருவின் நடுவில் உட்கார்ந்து மறியல் போராட்டம் நடத்தினார். தன்னுடைய புகாரின் பேரில் சீமான், ஹரி நாடார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று கோரி இந்த போராட்டத்தை நடத்தினார். போலீசாரின் சமாதானத்திற்கு பிறகு அவர் போராட்டத்தை கைவிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சீமானோ, ஹரி நாடாரோ என்னிடம் சமாதானத்திற்கு வரவில்லை. அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை. அதனால் நான் வீட்டுக்குள்ளேயே உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். நான் தற்கொலை டிராமா நடத்துகிறேன் என்கிறார்கள். அவர்களுக்கு என்னை அவமானப்படுத்துவதே நோக்கம். எனக்கு நீதி கிடைக்கும்வரை விட மாட்டேன். என்றார்.