Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'எனக்கு ஏதாவது நடந்தால் சூர்யாவே பொறுப்பு' - மீரா மிதுன்

02 ஆக, 2020 - 11:07 IST
எழுத்தின் அளவு:
Meera-mithun-slams-Suriya

'சூர்யா, விஜய் ரசிகர்கள், என்னை போனில் மிரட்டுகின்றனர்; எனக்கு ஏதாவது நேர்ந்தால், சூர்யா தான் பொறுப்பு' என, நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன் கூறியுள்ளார்.

தன்னை தானே சூப்பர் மாடல் என கூறிக் கொள்ளும் நடிகை மீரா மிதுன் தொடர்ந்து நடிகர்கள் பலரையும் விமர்சித்து வருகிறார். 'ஹிந்தி பட உலகை போல, தமிழ் திரையுலகிலும் வாரிசு அரசியல் உள்ளது. சில கும்பல்களின் செயல்களால், பலருக்கு பட வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன' என, நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன் டுவிட்டரில் புகார் கூறி வருகிறார்.

சமீபத்தில் ரஜினி, திரிஷா, தனுஷ், விஜய் குறித்தும் இவர் பேசியிருந்தார். இந்நிலையில் சூர்யா குறித்து ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் அவருக்கு நடிக்கவே தெரியாது. ஒரு சாதாரண காட்சிக்கு கூட 20 டேக்கு வாங்குவார். ஆக்டிங்கிற்கு என்ன ஸ்பெல்லிங் என கேட்பவர் சூர்யா என விமர்சித்து இருந்தார் மீரா.

இந்நிலையில் சூர்யா, விஜய் ரசிகர்கள், தன்னை தொடர்ந்து, போனில் மிரட்டி வருவதாக கூறியுள்ளார். டுவிட்டரில் மீரா மிதுன் கூறியுள்ளதாவது: சூர்யா, விஜய் ரசிகர்களிடம் இருந்து, மோசமான செய்திகள், மொபைல் அழைப்புகள், கற்பழிப்பு மற்றும் மரண அச்சுறுத்தல்கள் வருகின்றன. உங்கள் மனைவியருக்கும், குழந்தைகளுக்கும் இதுபோல் நடந்தால் ஏற்பீர்களா...; 80க்கும் மேற்பட்ட எண்களில் இருந்து மிரட்டல்கள் வருகின்றன. என் மொபைல் போன் எண்ணை, பல்வேறு குழுக்களுக்கு பரவ விட்டுள்ளனர். எனக்கு ஏதாவது நடந்தால், சூர்யா தான் பொறுப்பாவார். உறுதியற்ற நிலைக்கு என்னை துாண்டுகின்றனர். நிச்சயமாக இதற்கு பதிலளிப்பீர்கள் என, நம்புகிறேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (18) கருத்தைப் பதிவு செய்ய
அண்ணாத்த பற்றி தினம் ஒரு தகவல் : ரஜினி-நயன்தாராவின் மகளாக கீர்த்தி சுரேஷ்?அண்ணாத்த பற்றி தினம் ஒரு தகவல் : ... எனக்கு நீதி கிடைக்கும் வரை விட மாட்டேன் - விஜயலட்சுமி எனக்கு நீதி கிடைக்கும் வரை விட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (18)

தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
08 ஆக, 2020 - 20:34 Report Abuse
தாமரை செல்வன்-பழநி சூர்யா பெரிய அரசியல் பேக் ரவுண்டும் வேறு வகையான பின் புலமும் உள்ள ஆள். எனவே இவர் பற்றிய உண்மைகளை சொல்ல முயற்ச்சிப்பது நல்லதல்ல.
Rate this:
Abdul Aleem - chennai,இந்தியா
03 ஆக, 2020 - 10:53 Report Abuse
Abdul Aleem இவர் சூர்யாவின் பெயருக்கு அவமரியாதையை உண்டுபண்ண நினைக்கிறார்
Rate this:
Suman - Mayiladuthurai ,இந்தியா
03 ஆக, 2020 - 09:37 Report Abuse
Suman இவர் சொல்வதில் அதிகம் உண்மை உள்ளது.
Rate this:
rajan - chennai,இந்தியா
03 ஆக, 2020 - 09:03 Report Abuse
rajan உண்மை கசக்கும். இந்த நடிகர்கள் வைத்திருக்கும் ரசிகர் சங்கங்கள் ..இது மாதிரி யாராவது பேசினால் கவனித்து கொள்ளவே.. அரசியல் போலத்தான் சினிமாவும் ..அபாயகரமானதே ..
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
03 ஆக, 2020 - 06:45 Report Abuse
Sanny எல்லோரையும் சீண்டி இழுத்து கேவலப்படுத்தினார், இப்போ ஏதாவது நடந்தால் சூர்யாதான் பொறுப்பு. நல்ல கெமிஸ்ட்ரி.
Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in