Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆன்லைன் ரம்மி: தமன்னா, விராட் கோலியை கைது செய்யக் கோரி வழக்கு

01 ஆக, 2020 - 16:36 IST
எழுத்தின் அளவு:
Online-rummy-:-case-file-against-actress-Tamanna

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் இளைஞர்கள் பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தும், ஒரு சிலர் தற்கொலை முடிவுக்கு சென்றதாகவும் ஏற்கனவே பல்வேறு புகார்கள் உள்ளன. சமீபத்தில் இது குறித்த வழக்கு ஒன்றை விசாரித்த நீதிமன்றம், ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்வது குறித்து மத்திய மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும் என அறிவுறுத்தியது. தெலுங்கானா போன்ற மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதித்து விட்டன. தமிழகத்திலும் ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தவர்களை ஆன்லைன் ரம்மி விளையாடச் சொல்லி தூண்டியதாக நடிகை தமன்னா மற்றும் விராட் கோலி மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகள் குறித்த விளம்பரங்களில் நடித்ததற்காக அவர்கள் இருவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த மனு, ஆகஸ்ட் 4 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இதனால் தமன்னா மற்றும் கோலி கைது செய்யப்படுவார்களா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
புதிய தயாரிப்பாளர் சங்கம் - பழைய தயாரிப்பாளர்கள் கடும் எதிர்ப்புபுதிய தயாரிப்பாளர் சங்கம் - பழைய ... நீச்சல் குளத்தில் போட்டோ ஷுட் -  அசத்தும் சித்ரா நீச்சல் குளத்தில் போட்டோ ஷுட் - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Muruga Vel - Mumbai,இந்தியா
02 ஆக, 2020 - 05:57 Report Abuse
 Muruga Vel தேவையில்லாமல் விளம்பரங்கள் மெயில் மூலமாகவும் இணையதளங்களில் செய்தி படிக்கும் போதும் வந்து வேலையில்லாத இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்கின்றன ..இந்த லட்சணத்தில் உங்கள் கணக்கில் ஆயிரம் ரெண்டாயிரம் வரவு வைக்கிறோம் என்று விளம்பரம் ..கோலி போன்றோர்கள் விளம்பரத்தில் நடிப்பது கேவலம் ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in