Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஏ.ஆர்.ரஹ்மானை பாலிவுட் ஒதுக்க இதுவும் ஒரு காரணம் ?

01 ஆக, 2020 - 14:18 IST
எழுத்தின் அளவு:
This-is-also-one-of-the-reason-for-AR-Rahman-avoided-in-Bollywood

கடந்த சில தினங்களுக்கு முன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாலிவுட் சினிமா தன்னை புறக்கணிக்கிறது என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். குறிப்பாக ஆஸ்கர் விருது பெற்ற பிறகுதான் அவர் இவ்வாறு புறக்கணிக்கப்படுகிறார் என்பது அவர் பேச்சிலிருந்து நன்றாகவே தெரிகிறது.. ஆனால் பாலிவுட்டிலோ ஏ.ஆர்.ரஹ்மான் ஒதுக்கப்படுவதற்கு வேறு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது.

பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோஹர், தான் தயாரிக்கவிருந்த படம் ஒன்றுக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானை அணுகியபோது, அந்த பாடல்களுக்கான காப்பிரைட்ஸ் தனக்குத்தான் வேண்டும் என கேட்டாராம் ஏ.ஆர்.ரஹ்மான். பொதுவாக பாலிவுட்டில் காப்பி ரைட்ஸை அப்படி கொடுப்பது வழக்கம் இல்லை என்பதால், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பதிலாக சங்கர்-எசன்-லாயை ஒப்பந்தம் செய்தாரம் கரண் ஜோஹர். பல தயாரிப்பளர்களும் ஏ.ஆர்.ரஹ்மானுக்காக விதிகளை மாற்ற விரும்பவில்லையாம். அதனால்தான் ஏ.ஆர்.ரஹ்மானை அணுகுவதற்கு யோசித்து தயங்கி நின்று விடுகிறார்களாம். இதுதான் ஏ.ஆர்.ரஹ்மான் பாலிவுட்டில் புறக்கணிக்கப்படுவது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிவிட்டது என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (24) கருத்தைப் பதிவு செய்ய
இணையதளத்திற்கு வரும் நாடகங்கள்இணையதளத்திற்கு வரும் நாடகங்கள் ஆன்லைனில் ஷோபனாவின் கிருஷ்ணாவதாரம் ஆன்லைனில் ஷோபனாவின் கிருஷ்ணாவதாரம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (24)

Shroog - Mumbai ,இந்தியா
08 ஆக, 2020 - 04:20 Report Abuse
Shroog இளையராஜாவும் அவரது பாடல்களை காப்புரிமைவாங்கி கொண்டு இருக்கிறார். AR ரகுமான் செய்வது தவறு என்றால், இளையராஜா செய்வதும் தவறு தான். பொதுவாக சொல்ல போனால், அந்த பாட்டு தயாரிப்பாளருக்கு தான் சொந்தம். Ar ரகுமான் பல நல்ல பாடல்களை தந்து இருக்கிறார். இளையராஜா பாடல்களில் சில பாடல்கள் தான் நல்லது. மாற்றவை அரைத்த மாவு போன்றது தான்.
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
05 ஆக, 2020 - 19:36 Report Abuse
Natarajan Ramanathan ரஹ்மான் புகழ் அடைந்தது வெறும் குருட்டு அதிர்ஷ்டத்தில். ரொம்பநாள் நிலைக்காது.
Rate this:
துயில் விரும்பி - coimbatore,இந்தியா
03 ஆக, 2020 - 09:48 Report Abuse
துயில் விரும்பி ஒரு படத்திற்கு இசை அமைக்க முழு தொகை வாங்கி விட்டால் அந்த படம் சம்மந்தப்பட்ட எல்லா உரிமையும் தயாரிப்பாளருக்கே சொந்தம். ஒரு வேளை பாதி தொகை கொடுங்கள் மீதி தொகைக்கு காப்புரிமை கொடுங்கள் என்று சொன்னால் நியாயமாகவும் இருக்கும் தயாரிப்பாளருக்கு தயாரிப்பு செலவும் குறையும்.
Rate this:
K.ANBARASAN - muscat,ஓமன்
03 ஆக, 2020 - 09:01 Report Abuse
K.ANBARASAN திரைப்படம் வெளியீடு அதன் வியாபார சந்தை இன்றைய கொரோனாவின் முன்பு விழி பிதுங்கி நிற்கிறது. இதில் நூத்தி எட்டு நிபந்தனை போட்டால் எப்படி கட்டுப்படியாகும் தயாரிப்பாளர்களுக்கு..ரஹ்மான் நிபந்தனைகள் அப்படி போட்டிருந்தால் அது சரியல்ல. ஒரு சில பாடல்கள் தவிர மற்ற பாடல்கள் ரகுமான் இசையில் ஒரு இரைச்சல் தான். இளையராஜாவின் முதல்படமான அன்னக்கிளி பாடலான "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாடல் இன்று கேட்டாலும் கண்ணில் நீர் சுரக்கும்...மனதை ஊடுருவும் ஆத்மார்த்தமான அது போன்ற பாடல் தான் என்றும் நிலைத்து நிற்கும்.
Rate this:
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
02 ஆக, 2020 - 21:10 Report Abuse
Tamilan மற்ற மதவாதிகளை தாஜா செய்ய உலக தமிழர்களின் செல்லப்பிள்ளை, மற்ற மதவாத நாடுகளின் பணத்திற்காக உலகத்தமிழர்களின் தூண்டில் புழுவும் கூட. போக மற்ற மதவாத நாடுகளின் மறைமுக ஏஜெண்டு. அதனால்தான், இந்தியாவில் யாரும் கந்துகொள்ள மாட்டேன் என்கிறார்கள் .
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
03 ஆக, 2020 - 00:08Report Abuse
Ramesh Rஎங்கே இருந்து இந்த பதிவை போடுகிறீர்கள் நண்பரே? விசா கான்செல் செய்யப்பட்டு நம்மூர் வர ஆசையா...
Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in