சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
பிரபல வில்லன் நடிகர் சோனுசூட் இப்போது ரியல் ஹீரோ. கொரோனா ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்து வருகிறார். சமீபத்தில்கூட தன் மகள்களை ஏரில் பூட்டி உழுத ஆந்திர விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தார். காய்கறி விற்ற கம்ப்யூட்ர் பொறியாளருக்கு வேலை கொடுத்தார், ரோட்டில் சிலம்பம் காட்டி பிச்சை எடுத்த மூதாட்டியை தற்காப்பு கலை பயிற்சியாளராக்கினார். புலம் பெயர்ந்த மக்களை சொந்த ஊருக்கு பஸ், ரெயில், விமானத்தில் அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சோனுசூட்டுக்கு பிறந்த நாள். இந்த நாளில் அவர் மற்றுமொரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். கொரோனா வைரஸ் பாதிப்பால் வேலை இழந்த 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்போவதாக அறிவித்திருக்கிறார்.
பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்த இந்த பணிகளை அவர் செய்ய இருக்கிறார். இதற்காக தனியாக இணையதள பக்கம் ஒன்றையும் அவர் தொடங்கி இருக்கிறார். வருங்கால வைப்பு நிதி, பணி பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளுடன் இந்த வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரப்போவதாக அறிவித்திருக்கிறார்.