'கர்ணன்' - திகைத்துப் போன சந்தோஷ் நாராயணன் | அப்பா தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி | பாடும் நிலா எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு | மீண்டும் களத்தில் குதித்த ஷிவானி | மகன் படப்பிடிப்பிற்காக அதிகாரத்தை பயன்படுத்தவில்லை ; சுமலதா எம்.பி விளக்கம் | ஓணம் பண்டிகைக்கு தள்ளிப்போன மரைக்கார் ரிலீஸ் | தம்பியின் டைரக்சனில் நடிக்கும் அஜ்மல் | மலையாளத்தில் நுழைந்த சந்தோஷ் நாராயணன் | பாபி சிம்ஹா படத்திற்கு இசையமைக்கும் பிரேமம் பட இசையமைப்பாளர் | காதி உடை கொடுத்த கமலை விமர்சித்த சுசித்ரா |
காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்பதை சினிமாவில் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கும். குழந்தை நட்சத்திரங்களாக நடிக்கும் பெண் குழந்தைகள் அடுத்த சில வருடங்களில் நாயகிகளாக அறிமுகமாகும் அளவிற்கு வளர்ந்துவிடுவார்கள். அந்த விதத்தில் தற்போது ஆச்சரியப்படுத்தி உள்ளவர் 'விஸ்வாசம்' அனிகா.
அப்படத்தில் அஜித்தின் மகளாக சிறுமியாக நடித்தவர் அனிகா. தற்போது புடவை அணிந்து அவர் எடுத்துள்ள சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. 'விஸ்வாசம்' படம் வெளிவந்து ஒன்றரை வருடங்கள் தான் ஆகிறது. அந்தப் படத்தில் சிறுமியாக இருந்தவர் அதற்குள் ஹீரோயினாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டாரா என ரசிகர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.
குழந்தை நட்சத்திரமாக பெயர் வாங்கியவர்கள் நாயகியான பின்னும் அதே பிரபலத்துடன் இருப்பது ஒரு சிலருக்குத்தான் நடந்துள்ளது. ஸ்ரீதேவி, மீனா என ஒரு சிலர் அவ்வளவு பிரபலமடைந்தனர். அந்த ராசி அனிகாவுக்கும் வருமா என்பது அவர் நாயகியாக அறிமுகமானபின் தெரிந்துவிடும்.