போனில் மட்டும் பேசு : பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு டார்ச்சர் கொடுத்த இயக்குநர் | எதிர்நீச்சல் தொடரில் 10 ஆண்டுகள் கூட நடிப்பேன் : மதுமிதா மகிழ்ச்சி | தீபிகா படுகோனின் ஜிம் மேட்டாக மாறிய ஐஸ்வர்யா மேனன் | 17 வருடங்களுக்கு பிறகு 2ம் பாகத்திற்காக இணைந்த சுரேஷ் கோபி - ஜெயராஜ் | மறுபிறவி ரகசியம் உடைக்கும் 'ஆன்மீக அழைப்பு' | தமிழில் வெளியாகும் ஹாலிவுட் பேய் படம் | மைதான் : அறியப்படாத இந்திய கால்பந்து அணியின் கதை | பிரியங்கா சோப்ராவை துரத்தியது கரண் ஜோஹர்தான்: கங்கனா குற்றச்சாட்டு | வெப் தொடரில் நடிக்கும் பிக்பாஸ் மணிகண்ட ராஜேஷ் | அரசியலுக்கு வரமாட்டேன் : விஜய் சேதுபதி பேட்டி |
தமிழ் சினிமாவில் ' யாவரும் நலம் ' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நீத்து சந்திரா. அதன் பிறகு இவர் தீராத விளையாட்டுப் பிள்ளை, ஆதிபகவன், சேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.
நிஜ வாழ்கையில் டேக்வாண்டே கராத்தே வீராங்கனையான நீத்து, தன்னை ஏன் ஆக்ஷன் படங்களில் நடிக்க வைக்க இயக்குநர்கள் விரும்புவதில்லை என வேதனை தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் மேடையில் காலால் பலகையை உடைத்து ஆச்சர்யப்படுத்திய நீத்து, அந்த வீடியோவைப் பகிர்ந்து இந்த வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.
அதில், "மேடையில் என்னை ஒரு பலகையை உடைக்க சொல்லி மாஸ்டர் லீ என்னை ஆச்சரியப்படுத்தினார். அதை உதைப்பதற்கு முன் நான் என்ன சொன்னேன் தெரியுமா? ஜெய் மாதா ஜி என்றேன். டேக்வான்டோ காராத்தேவில் 4வது முறையாக கருப்பு பெல்ட் வாங்கியிருக்கிறேன். இந்தியாவிற்காக 3 முறை சர்வதேச காராத்தே போட்டிகளில் பங்கேற்றிருக்கிறேன். அப்படி இருந்தும் என்னை ஏன் ஆக்ஷன் படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்கள் யோசிக்க மறுக்கிறார்கள் என தெரியவில்லை. எனக்காக சண்டைபோட / போராட யாராவது இருக்கிறீர்களா", என நீத்து சந்திரா ஆதங்கப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாட்டில் கேப் சேலஞ்ச் டிரெண்டிங்கில் இருந்த போது, தானும் அந்த சவாலை வெற்றிகரமாக செய்த வீடியோவை நீத்து பகிர்ந்திருந்தார். அந்த வீடியோ அப்போது வைரலானது குறிப்பிடத்தக்கது.