Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஓடிடி தோல்விகளை சரிக்கட்டுமா 'டேனி' ?

30 ஜூலை, 2020 - 17:38 IST
எழுத்தின் அளவு:
Did-Danny-will-get-sucess-in-OTT?

கொரோனா ஊரடங்கில் ஓடிடி தளங்களில் பட வெளியீடு என்பது ஆரம்பமாகி இரண்டு மாதங்களாகிவிட்டது. முதல் வெளியீடாக மே 29ம் தேதி ஜோதிகா நடித்த 'பொன்மகள் வந்தாள்' படம் வெளியாகியது. அதன்பின் கீர்த்தி சுரேஷ் நடித்த 'பெண்குயின்', காயத்ரி ரகுராம் நடித்த 'யாதுமாகி நின்றாய்', யோகி பாபு நடித்த 'காக்டெய்ல்' ஆகிய படங்கள் வெளிவந்தன. இந்தப் படங்கள் அனைத்துமே எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறவில்லை. தியேட்டர்களில் வெளியாகி இருந்தால் ஒரு சில நாட்கள் மட்டுமேதான் ஓடியிருக்கும் என்று ரசிகர்கள் தெரிவித்தனர்.

கடந்த 20 நாட்களாக எந்த தமிழ்ப் படமும் ஓடிடி தளங்களில் வெளியாகவில்லை. ஆகஸ்ட் 1ம் தேதி வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள த்ரில்லர் படமான 'டேனி' படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் ஒரு நாய் தான் ஹீரோ. அந்த நாயும், வரலட்சுமியும் இணைந்து தொடர் கொலைகளுக்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது தான் படத்தின் கதை.

ஓடிடி தளங்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களைத்தான் அதிகம் வாங்கி வெளியிடுகின்றன. அப்படி வெளிவந்த மூன்று படங்கள் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. 'டேனி' படத்திலும் வரலட்சுமி தான் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனால், முதல் மூன்று படங்களக்கு ஏற்பட்ட குறையை வரலட்சுமி சரிசெய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பேய்க்கதை.. வெப்சீரிஸில் களமிறங்கும் வடிவேலு.. உறுதி செய்த இயக்குநர் சுராஜ்!பேய்க்கதை.. வெப்சீரிஸில் ... தமிழகத்திலும் ஒரு சுஷாந்த் சிங்கை நான் பார்க்க விரும்பவில்லை : ஓவியா தமிழகத்திலும் ஒரு சுஷாந்த் சிங்கை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KayD - Mississauga,கனடா
01 ஆக, 2020 - 01:05 Report Abuse
KayD கஷ்டம் தான் ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in