'விக்ரம் 3'க்கும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குநர்: கமல் | பியூட்டி கம்மிங் ஒத்து : ரம்யா கவுடாக்கு ஆர்மி ரெடி | தேவதை போல் ஜொலிக்கும் ஸ்ருதிராஜ் | விக்னேஷ் சிவனுக்கு அஜித் போட்ட உத்தரவு | ‛வீரன்'-ஆக களமிறங்கிய ஆதி | தனுஷ் பிறந்தநாளில் திரைக்கு வரும் திருச்சிற்றம்பலம் | 12 நாட்களில் 100 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் டான் | விஜய்யின் 68வது படத்தை இயக்கும் அட்லி | கஞ்சா பூ கண்ணாலே பாடல் லிரிக் வீடியோ வெளியீடு | ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கவுதம் கார்த்திக் நடிக்கும் ‛1947 ஆகஸ்ட் 16' |
சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணத்தை தொடர்ந்து பாலிவுட்டில் நெபோடிசத்திற்கு எதிராக ஆரம்பித்த குரல்கள் தற்போது தென்னிந்திய சினிமா துறைகளிலும் ஒலிக்க ஆரம்பித்து விட்டன. இந்தநிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெலுங்கு சினிமாவிலும் நெபோடிசம் நிலவுவதாக நடிகை இலியானாவும் தன் பங்கிற்கு கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.. ஆனால் இலியானாவின் இந்த கருத்துக்கு ஆதரவு கிடைக்காததோடு, நெட்டிசன்களின் கோபத்துக்கும் ஆளாகியுள்ளார் இலியானா.
இதுபற்றி நெட்டிசன்கள் கூறியதாவது, “தெலுங்கு சினிமாவில் எந்த வாரிசாகவும் இல்லாமல் வெளியே இருந்து வந்தவர் நீங்கள்.. அதன்பின் அனைத்து இளம் முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பையும் பெற்றீர்கள்.. அதிக சம்பளம் கேட்டதால் தான் உங்களை தெலுங்கு மற்றும் தமிழில் ஒதுக்க தொடங்கினார்கள்.. பாலிவுட்டில் வாய்ப்பு தேடி வந்ததும் தெலுங்கு திரையுலகை மறந்துவிட்டு அங்கே ஓடினீர்கள்.. அங்கே கண்டுகொள்ளவில்லை என்றதும் மீண்டும் இங்கே வந்துள்ளீர்கள். திரையுலகில் மிகப்பெரிய ஏற்றங்களை எல்லாம் பெற்ற நீங்கள், நெபோடிசம் குறித்து பேசலாமா..? வாய்ப்பு நிராகரிக்கப்பட்டவர்கள் பேச வேண்டிய வலி மிகுந்த விஷயம் அது. தயவுசெய்து ஒதுங்கி நின்று வேடிக்கை மட்டும் பாருங்கள்” என இலியானாவை கமென்ட்டுகளால் அர்ச்சனை செய்து தள்ளிவிட்டனர்..