துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
தன்னைத் தானே சூப்பர்மாடல் என அழைத்துக் கொண்டு, எப்போதும் பிஸியாக இருப்பது போல் காட்டிக் கொள்பவர் நடிகை மீரா மிதுன். மற்ற பிரபலங்களைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் ஏதாவது பேசி தன்னை ஊடக வெளிச்சத்தில் வைத்திருப்பது அவரது வாடிக்கையாகி விட்டது.
சமீபகாலமாக ரஜினி, விஜய், திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பல முன்னணி நடிகர், நடிகையர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். ஏற்கனவே நடிகை திரிஷா தன்னைப் பார்த்து காப்பியடிப்பதாக அதிரடியாக குற்றம்சாட்டியிருந்த மீரா மிதுன், விரைவில் அவரைப் பற்றி விரிவாக ஒரு வீடியோ வெளியிடப் போவதாகத் தெரிவித்திருந்தார்.
அதன்படி தற்போது அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது இதே த்ரிஷாவை பீட்டா உறுப்பினர் என்பதால் எல்லோரும் தூற்றினீர்கள். இன்றைக்கு நான் த்ரிஷா மீது குற்றம் சுமத்தும் போது நான் உங்களுக்கு கெட்டவளாகத் தெரிகிறேன். த்ரிஷாவை இப்போது நீங்கள் எல்லோரும் சேர்ந்து நல்லவராக காட்டுகிறீர்கள்.
பீட்டா அமைப்பின் உறுப்பினர் என்பதால் அவர் அனைத்து பிராணிகள் மீதும் அக்கறை செலுத்தினாரா? இன்று வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆடு, கோழிகள் வெட்டப்படுகின்றன. அதற்கெல்லாம் அவர் குரல் கொடுத்தாரா? நம் நாட்டு காளைகள் தான் உயிரினமாக தெரிகிறதா. அதன் மீதுதான் அவர் குறி வைக்கிறாரா?
அந்த நேரத்தில் அவர் மன்னிப்பு கேட்கவில்லை. அவருடைய அம்மா தான் மன்னிப்பு கேட்டார். நெப்போட்டிசம் என்பது சாதியிலிருந்து தான் வருகிறது. நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். த்ரிஷா திரைத்துறைக்குள் வந்தது, இன்று வரை அவர் தன்னை தக்கவைத்துக் கொண்டிருப்பதற்கு ஒரே ஒரு காரணம் உயர்சாதி என்பதுதான்.
நான் ஈ.வே.ரா பற்றி ஒரு டுவீட் போட்டேன். அதைக்கூட நீங்கள் எல்லோரும் கிண்டலடித்தீர்கள். சாதியால் வரக்கூடிய நெப்போட்டிசம் அழிய வேண்டும் என்பதற்காகத் தான் அவர் அவ்வளவு பாடுபட்டார். ஆனால் நீங்கள் இப்போது யாருக்கு ஆதரவளிக்கிறீர்கள் என்பது நன்றாகவே தெரிகிறது.
சாதியால் வரக்கூடிய நெப்போட்டிசம் அழிய வேண்டும் என்றால் இன்னொரு ஈ.வே.ரா பிறந்துதான் இதை மாற்ற வேண்டும் என்றால் அவரை பின்பற்றுவராக நானே உருவெடுத்து இவை அனைத்தையும் நானே மாற்றிக் காட்டுவேன்” என அந்த வீடியோவில் மீரா மிதுன் பேசியுள்ளார்.
அதோடு பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறிய போது, அதனைக் கண்டு கொள்ளாத நடிகர் கமல், தன்னுடைய ஜாதி என்ற காரணத்தினால் திரிஷாவுக்காக மட்டும் குரல் கொடுத்துள்ளார் என மீரா மிதுன் குற்றம் சாட்டியுள்ளார். கமல் கடந்த 2017ம் ஆண்டு திரிஷாவுக்கு ஆதரவாக வெளியிட்ட டுவீட்டை சுட்டிக் காட்டி இந்தப் பதிவை அவர் வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே ரஜினியையும், விஜய்யையும் இதே போல் கன்னடர், கிறிஸ்தவர் என காட்டமாக விமர்சித்திருந்தார் மீரா மிதுன். தற்போது கமலையும், திரிஷாவையும் அதே போல் ஜாதியை வைத்து விமர்சித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.