பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
நடிகை வனிதா, சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்தார். இதிலிருந்து பல்வேறு சண்டை, சச்சரவுகளில் அவர் சிக்கி வருகிறார். திரைப்பிரபலங்களுடன் மல்லுக்கட்டு, பீட்டர் பாலின் முதல் மனைவி மற்றும் யு-டியூப் சூர்யாதேவி ஆகியோருடன் சண்டை என இருந்து வருகிறார்.
இந்நிலையில் வனிதா மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகி வருகின்றன. ஏற்கனவே சூர்யா தேவி மீது இவர் புகார் அளித்தார். பதிலுக்கு அவரும் இவர் மீது புகார் கொடுத்தார். இதுஒருபுறம் இருக்க நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், தன்னையும், தன் கணவரையும் அவதூறாக பேசினார் என வனிதா மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் சென்னை, ஐயப்பன்தாங்கலில் உள்ள குடியிருப்பில் கொரோனா காலத்தில் அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தியதாக அடுக்குமாடி குடியிருப்பு சங்க பொது செயலாளர் நிஷா தோட்டா அளித்த புகாரின் பேரில் வனிதா மீது இப்போது இன்னொறு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்படி அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்தாலும் அதை எல்லாம் சமாளித்து எதையும் சந்திப்போம் என கெத்தாக தன் வேலையை பார்க்க சென்றுவிட்டார். சின்னத்திரையில் படப்பிடிப்புகள் துவங்கி உள்ளன. இவர் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்கிறார். இதற்கான படப்பிடிப்பு இன்று(ஜூலை 28) துவங்கியது. படப்பிடிப்பு தளத்தில் இருந்தபடி மேக்-அப் போட்டுக் கொண்டு நிகழ்ச்சி தயாராகி நேரலையில் ரசிகர்களுடன் பேசினார்.
அதில், ''நான்கு மாதங்களுக்கு பிறகு படப்பிடிப்பில் பங்கேற்கிறேன். எப்பவும் நெகட்டிவாக பேசுபவர்கள் நெகட்டிவாகாதான் இருப்பார்கள். நாம் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் எல்லாவற்றையும் தூக்கி போட்டு மிதித்து ஏறி போய்கிட்டே இருக்கணும். நான் என் பணியை தொடருகிறேன்'' என தெரிவித்துள்ளார்.